Thursday, May 17, 2012

விடை நீயே

மௌனம் மயான மௌனம்


இருட்டு கருவறை இருட்டு

அடுத்ததும் பொட்டையா

கூசாமல் கொன்று விடு

அல்லது ஓடு அப்பன் வீட்டுக்கு

அடுத்து கட்டப்போகும் மகராசி

பெறுவாள் மகனை புருசனுக்கு

கள்ளிப்பாலும் நெல்லுமணியும்

பழசாகி குளிப்பாட்டி குளிரில்

விறைக்க வைப்பது புது உத்தி

சட்டம் என்ன செய்யும் பாவிகளே

அதி நவீன சோதனைக்குப்பின்

ஓசையின்றி ஒழிக்கும் பட்டணமே

நாலெழுத்து சொல்லித்தர ஏலாதாம்

நகை நட்டு போட வக்கில்லையாம்

வேலியிட்டு பயிரை பாதுகாக்கணுமா

பொய்யாய் புனைய எத்தனை காரணம்

இரண்டாம் தர குடிமகளாய் அழுத்தி

குடி முழுகிப் போகவே குழி பறிக்கிறார்

கண்ணே கண்மணியே கலங்காதே

முடிவில்லா கிரகணமிருந்ததில்லை

வெள்ளி நிலவே வெள்ளை மலரே

விசும்பின் ஒளியே வாழ்வின் சுவையே

வினைகளின் வினாக்களின் விடை நீயேIndiBlogger - The Indian Blogger Community

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community