ஏழ்மையறியா இந்திரலோகம் படைத்தேன்
தங்கக்காசு அங்கே கொட்டுது மழையாய்
மாடி வீடுகள் கேளிக்கைகள் பூங்காக்கள்
காய்த்துத் தொங்கும் கனிமரங்கள் காணீர்
எத்தனை பூக்கள் தாவரங்கள் குளிர்ச்சியாய்
வழுக்கும் தார் சாலைகள் மாநகரந்தன்னிலே
எந்நேரமும் மக்கள் கூட்டமாய் நடமாட
அவர்களையெல்லாம் அன்பாய் நான் வரவேற்க
உற்சாகம் பெருக மேலும் மேலும் வளர்கிறது
கற்பனை கலந்து உருவாகும் அழகோவியமாய்
காலம் போவது தெரியாமல் மூழ்கினேன்
பொய்யுலகின் பொழுதுபோக்குகள் அற்புதம்
இணையத்தில் விளையாடும் சிறுமியானேன்