Wednesday, August 21, 2013

அறைகூவல்

IndiBlogger - The Indian Blogger Community உலகத்திலே அழகாக பூத்திருக்கு மொழிப்பற்று
மக்கள் குழாம் உரையாடுவது அவரவர் மொழியிலே
தனி மணம் தனி குணம் கொண்ட தமிழினம் ஏனோ
இதிலே இணையாமல் ஆங்கிலத்தைப் பற்றிடலாமோ
அருமை மகன் உதவியுடன் தமிழ் மென்பொருள்
தரவிறக்கம் செய்தேனே சுற்றத்தை நட்பை
இணையத்திலே தமிழை மணக்கச்செய்ய
வாரீரென அன்பாய் விட்டேன் அறைகூவல்

Sunday, August 18, 2013

சரித்திரம்

IndiBlogger - The Indian Blogger Community புரியாமலேயே சொல்வதை எழுதக்கூடாது
வியாசர் விநாயகருக்கிட்ட பதிலாணை
இடைவிடாமல் கதையைச் சொல்லச் சொன்ன
மூத்தவனின் உத்தரவிற்கு மறுமொழி
நிதானமாய் கதை தொடர கண்ட வழி
நின்று கிரகித்து பதித்தான் ஆனைமுகன்
ஆயிரமாயிரம் ஆண்டு வாழ்ந்தவரும்
அசுரரும் அந்தணரும் அரசரும் ஆரணங்குகளும்
அவர்தம் அளவில்லா ஆசாபாசங்களும் 
யயாதிக்கு யௌவனம் ஈன்று மூப்படைந்த
ஐந்தாம் மகன் பாசமும் பெற்ற பரிசும்
வரிசையாய் தொடரும் மகாகாவியமும்
மனிதன் மாறாது சரித்திரம் மாறாது
தொடரக்காண்பது மாயையா உண்மையா

Friday, August 16, 2013

நேற்று

IndiBlogger - The Indian Blogger Community நீரே அன்றோ நேற்று
விதிகள் வகுத்தது
வேதம் எழுதியது
வினைகள் ஆற்றியது
வியாபித்து நின்றது
விலங்கை பூட்டியது
எங்கும் எதிலும் காண்
ஆணாதிக்க சிந்தனை

புதிதா

IndiBlogger - The Indian Blogger Community பார்த்தாச்சு பல நூறு வேசம்
பாவிக்குப் பசியெடுத்தால் பாசம்
திமிரெடுத்தால் பறக்கும் சாட்டை
மனம் போல் ஆடுவான் வேட்டை
உபகாரத்துக்குப் எடுத்த அவதாரம்
யந்திரமாய் இயங்கவே ஒரு தாரம்
சிந்திக்கத் தெரியாத, கூடாத ஒருத்தி
கல்லை புல்லை பக்தியில் இருத்தி...
செக்கு மாட்டுத் தடத்தில் உழலும் மனிதா
அக்கினிக்குஞ்சு காட்டை எரிப்பது புதிதா

பெண்ணினம்

IndiBlogger - The Indian Blogger Community ஒரு வகைதான் ஆணினம்
அவ்வினம் அறியாத இலக்கணம்
பெருங்கடலான பெண்ணினம்
வர்ணிக்கத்தான் மானினம்
கற்பனைக்கெட்டா வல்லினம்
அடக்க முடியாததோர் இனம்
ஆதிக்க வெறி கொண்ட மேலினம்
வெல்ல முடியாத அற்புத தனம்

Thursday, August 15, 2013

பிணி

IndiBlogger - The Indian Blogger Community இன்னொன்று இன்னொன்று இன்னொன்று
ஈன்று ஈன்று ஈன்று
முயன்று முயன்று முயன்று
வென்று வென்று வென்று
வாகை சூடும் வனிதாமணி
ஆண் வாரிசு ஆசையெனும் பிணி

அழகிய அனுபவம்

IndiBlogger - The Indian Blogger Community மிஞ்சி நின்றது எத்தனை
ஒரு காக்காயை சுட்டபின்
சிறுவர் புதிர் இதுதானே
நிமிர்ந்து நேராய் நடந்தவர்
பட்ட துயர் பேசுகின்றன
காவியமும் சரித்திரமும்
மெத்த உணர்ந்தவர் நோகாமல்
நாசுக்காய் நயமாய் வளைந்திட
பறந்துவிட்ட காக்காயாயிருக்க
நெஞ்சை நிமிர்த்தும் தீரர்களோ
பிறப்பதும் சிறப்பதும் இன்றும்
தொடர்வதே அழகிய அனுபவம்
IndiBlogger - The Indian Blogger Community