Wednesday, August 10, 2011

The Human Seasons

IndiBlogger - The Indian Blogger Community
The Human Seasons

FOUR Seasons fill the measure of the year;
There are four seasons in the mind of man:
He has his lusty Spring, when fancy clear
Takes in all beauty with an easy span:
He has his Summer, when luxuriously
Spring’s honey’d cud of youthful thought he loves
To ruminate, and by such dreaming high
Is nearest unto heaven: quiet coves
His soul has in its Autumn, when his wings
He furleth close; contented so to look
On mists in idleness—to let fair things
Pass by unheeded as a threshold brook.
He has his Winter too of pale misfeature,
Or else he would forego his mortal nature.
-Keats.

மனித பருவங்கள்

வருட நீளத்தை நிறைக்கும் பருவங்கள் நான்கு
மனித மனங்களில் உண்டு பருவங்கள் நான்கு
தெளிவான புத்தி அழகத்தனையையும் அனாயாசமாய்
உள்வாங்கும் துடிப்பான வசந்தமுண்டு அவனுக்கு
பாதி செரித்த உணவாய் இளமை நினைவு தேனூறிக்கிடக்க
பசுவினைப் போல் சுகமாயதை அசைபோட விரும்புகிறான்
அவனுக்கு வாய்த்த வேனிற்காலத்திலே
உன்னத கனவிதில் கிடப்பதனால்
சொர்க்கத்தின் பக்கத்திலிருக்கிறான்
தனது இறக்கைகளை மடித்து
இளைப்பாறும் இலையுதிர்காலத்திலே
அமைதியான நீர் வளைவுகளை
கொண்டிருக்கும் அவன் ஆன்மா
மேகங்களைப் பார்த்துக் கொண்டு
சோம்பியிருப்பதும் நல்லவற்றை
வாசற்படியை ஒட்டியோடும் ஓடையைப் போல்
கடந்துசெல்லட்டுமென கவனியாதிருப்பதும்
போதுமென்று நிறைந்திருக்கும் மனது
சோகையான அலங்கோலமாய்
பனிக்காலமும் அவனுக்குண்டு இல்லையேல்
மனிதனென்ற அடையாளத்தையன்றோ
அவன் இழந்திருப்பான்

Tuesday, August 9, 2011

புதிர்

IndiBlogger - The Indian Blogger Community
போடா என்றால் வாடா
வஞ்சியின் அகராதி
அது மட்டுமா தனி
ஆழம் காணா கடல்
முத்தும் பவளமும்
சுறாவும் சிறுமீனும்
குவிந்திருக்கும் சுரங்கம்
எட்டாத தொடுவானம்
படைப்பின் அதிசயம்
விடை கண்டிடாத புதிர்

அசைபோட

IndiBlogger - The Indian Blogger Community
அசைபோட அவகாசமிருக்கு
வெள்ளி முடி வந்த பிறகு
அவசரமாய் உணவை உண்ணும் பசு
பின்னர் நான்கு அறை வயிற்றிலிருந்து
மீண்டும் அதை வாய்க்கு கொணர்ந்து
மெதுவாய் மென்று அதை விழுங்கி
செரித்து நலம் பெறுவது போலவே
அவசரமாய் உண்ட இளமையை
வசந்தகால தேன் உணவை
பனிகாலத்தில் அசைபோடும்
சுகத்தை ஆங்கில கவி கீட்ஸ்
அழகாய் சொன்னான் மனித வாழ்வை
இயற்கையின் நான்கு பருவமாக்கி
மறக்க முடியா ஓர் கவிதையில்

Monday, August 8, 2011

மேலதிகாரி

IndiBlogger - The Indian Blogger Community
செல்லவும் முடியாமல்
நிற்கவும் முடியாமல்
என்ன ஒரு அவதி இது
அவரோ என் மேலதிகாரி
தொலைபேசிக்கொண்டேயிருக்கும்
ரொம்ப முக்கிய பொறுப்பு
கொட்டாவியை அடக்கிவிட்டு
கற்பனை குதிரையை தட்டி
அவர் நாற்காலியிலெனை இருத்தி-
ரொம்ப சுகமாய்த்தான் இருக்கு

Sunday, August 7, 2011

நரகம்

IndiBlogger - The Indian Blogger Community
அழுக்கு இவ்வளவு அழுத்தமாய் பதிந்துள்ளதா
பதறுது பாவி மனம் பத்திரிக்கை படிக்கையில்
எத்தனை வக்கிரம் விசித்திரம் விகாரம் வன்மம்
அறுபது வயதில் பிள்ளைப் பெற்று பூரிக்கும் பாட்டி
அரசு தொட்டிலில் அநாதையாய் பிஞ்சு சிரிக்கும் படம்
பதவி நாற்காலியை உடும்பாய் பற்றிய ஊழல் மந்திரி
காதலனுடன் சேர்ந்து பெண் கணவனை செய்த கொலை
சிறுமியை கெடுத்த சாமியார்- உளதோ வேறு நரகம்

Wednesday, August 3, 2011

வேலை

IndiBlogger - The Indian Blogger Community
பிரமை பிடித்து சும்மா உட்கார்ந்திருக்காதே
உன்னை நம்பி இங்கே பல பணிகளிருக்கே
எடு சவக்காரத்தை கிளம்பு வான் மேலே
முதல் வேலை சந்திரனை சலவை செய்வதே

Tuesday, August 2, 2011

எல்லை

IndiBlogger - The Indian Blogger Community
இன்று வரை குறையில்லை
தூங்காமல் ஏங்கவில்லை
பிடிபடாமல் பறக்கவில்லை
வலிகள் கொல்ல முடிந்ததில்லை
சில கனவாவது பொய்க்கவில்லை
பேராசை என்றும் இருந்ததில்லை
விதியுடன் சண்டை போடவில்லை
வீணாய் மண்டை உடையவில்லை
எனக்கென வகுத்த ஓர் எல்லை
அதற்குள் நான் தோற்கவில்லை
IndiBlogger - The Indian Blogger Community