இளம் காலையிலே வேப்பமர இலைக்கு பின்னிருந்து
என்னை பார்க்கிறான்
கதகதப்பாய் அணைக்கிறான்
காணாது குளிரில் வாடியது உடல்
கார் காலமோ தனியொரு துயர்
உரிமையுடன் உரையாடினேன்
உள்ளத்தை கொள்ளை கொண்டவனுடன்
அடுக்காது இத்தனை நாள் விடுமுறை உனக்கு
படுத்தாதே ஒளிந்திருந்து
வையம் தாங்காது உன் பராமுகம்
No comments:
Post a Comment