மசக்கை வாந்தி வாட்டி மயங்கவில்லை
மாசமாக ஆக வயிறு மேடாக வளரவில்லை
நடை தளர்ந்து இடை சோர்ந்து
துவளவில்லை
சிறு அசைவும் உதையும் உணரவேயில்லை
கொல்லும் வலியில் துடித்து பெற்றெடுத்து
மீண்டும் மறுபிறவி எடுக்கவும் இல்லை
கனத்து கலசங்கள் அமுதினை சுரக்கவில்லை
அடி வயிற்றில் வரியாய் கோடுகள் விழவேயில்லை
அம்மா என்றழைக்க உயிரும் உலகமும் வந்ததே
அடடா அலங்கோல கலை உலகமே
தாறுமாறாகுதே தாய்மையின் இலக்கணமே
No comments:
Post a Comment