சிறந்திடுவீர் பறந்திடுவீர் கவலை மறந்திடுவீர்
சின்ன சின்ன கண்ணோட்ட மாற்றங்களால்
சமாளிக்கத் தெரிய வேண்டும் என்கின்றனர்
சிரித்து சிந்திக்க வைக்கும் அறிவுரைகளால்
சிக்கலும் தொல்லைகளும் வாட்டும் போது
சமைந்து சிலையாய் நின்று விட வேண்டாமே
சற்றே நோக்குங்கள் சுறுசுறுப்பான அந்த நாயை
சிக்கிய பண்டத்தை உருட்டியது புரட்டியது பின்
சீ சீ தின்ன லாயக்கில்லை எந்த பலனுமில்லையென
சீந்தாது சென்றது அதன் மேல் சிறுநீர் பெய்துவிட்டு
No comments:
Post a Comment