Tuesday, August 30, 2016

பொய்கள்

IndiBlogger - The Indian Blogger Community
என்புகளுக்காக கவசமாய்
பாதுகாப்பு பெட்டகமாய்
பார்க்க லட்சணமாய்
தசையும் சதையுமாய்
பூசி மெத்தி கடைசியாய்
தோலெனும் உரை மாட்டி
பத்து மாசம் கருவிருளில்
பல்லாண்டு பளீர் ஒளியில்
என விதித்து வந்த மெய்யில்
ஏனோ இத்தனை பொய்கள்

Wednesday, August 24, 2016

குறையொன்றுமில்லை

IndiBlogger - The Indian Blogger Community கொண்டாடுவோம் தலை மேல் கூரை உள்ளதென
கும்பி குளிர குடிக்க கஞ்சி தினமும் கிடைக்குதென
கோபமோ தாபமோ பகிர்ந்திட குடும்பம் உளதென
ஊனமின்றி பிறந்த நமக்கு குறையொன்றுமில்லை

கோவில்கள்

IndiBlogger - The Indian Blogger Community தொழுதிட வேண்டும் தெய்வத்தை
குழுமிட வேண்டும் குடும்பமாய்
தழுவிட வேண்டும் தானங்கள்
எழுதிட வேண்டும் நன்னெறிகள்
கழுவிட வேண்டும் அழுக்குகள்
நழுவிடாத சம்பிரதாயங்கள்
பழுதில்லா கொண்டாட்டங்கள்
இதற்குத்தானே கோவில்கள்

Sunday, August 21, 2016

மனக்குரங்கே

IndiBlogger - The Indian Blogger Community வர வர அதிகமாகுதுன் பிடிவாதம்
எல்லாம் தெரியுமென்ற அகம்பாவம்
சொல் புத்தி சுய புத்தி தொலைந்தது
நில்லாது அலைந்து நிலைதடுமாறுது
பகுத்தறியாது பேசி கொட்டமடிக்குது
அடக்கமுடியாதென் மனக்குரங்கே

Thursday, August 18, 2016

புதியது

IndiBlogger - The Indian Blogger Community சுவை இது புதியது
தேனாய் இனிக்குது
தனிமையே சுகம்
சாதனையே தவம்
பூட்டுகள் உடைந்து
அச்சங்கள் மறந்து
துணை தயவின்றி
அணங்கின் காலம்

Sunday, August 14, 2016

Be natural

IndiBlogger - The Indian Blogger Community Be natural is the new mantra
Parade not like lifeless mummies
Masked in fakes and makeups
No more artificial beauty aided
With synthetic scents and dyes
And a smartly tailored structure
Explore and enjoy the original glory
Of the skin’s own smell and texture
Unharmed by unwanted care and cure
Lo! The inner soul’s light glows bright
Through each and every feature no doubt
Be Nature’s child, not a made-up creature.
IndiBlogger - The Indian Blogger Community