Tuesday, July 31, 2012

சின்னஞ்சிறு குழந்தையாய்

கலங்கலாய் மாற்றும் சலனங்கள்
தெளிந்த சாரமில்லா நீரோடையை
ஆமையாய் நத்தையாய் ஊர்ந்த நாட்கள்
ரங்கராட்டினமாய் மாறிய கணங்கள்
அபூர்வமாய் வரும் இனிய  வரங்கள்
அடுக்காய் தொடர்கின்ற சம்பவங்கள்
பூப்போட்ட சராய் சட்டையில் சிப்பந்திகள்
ஆடி மகிழ்விக்க கணப்படுப்பில் முன்னால்
பலகாரம் ருசியாய் அணி வகுத்து வர
மாயக் கடற்கரை சூழலில் இனிப்புகளால்
வாயும் வயிறும் மனமும் குளிர்ந்து ததும்பிட
பல்லடுக்கு அங்காடியில் சுற்றித் திரிந்தபின்
பார்க்கும் சினிமாவும் பொழுதுதைச் சாப்பிட
எண்ணற்ற கேளிக்கைகள் குழந்தைகளுடன்
வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் கிடைக்க
இரவும் பகலும் தேதியும் கிழமையும் மாதமும்
மறக்கின்றதோர் மயக்கத்தில் மிதக்கிறேன்
மீண்டும் நானொரு சின்னஞ்சிறு குழந்தையாய்IndiBlogger - The Indian Blogger Community

Tuesday, July 17, 2012

ஆணைகள்

தொடர்க என்றன கண்கள்


ஊர்ந்து சென்றன கைகள்

கன்னியின் மௌன ஆணைகள்

காளையின் இனிய கணங்கள்IndiBlogger - The Indian Blogger Community

Saturday, July 14, 2012

வரங்கள்


IndiBlogger - The Indian Blogger Community மனசு நினைத்தது எதற்கு எனக்கு இத்தனை விழிகள்


காண விரும்பாத பல கசப்பான விபரீத காட்சிகள்

உறங்காமல் களைப்பில் போராடும் பரிதாப வேளைகள்

பொல்லாத விழிகள் போல் மனசுக்கு ஏன் இத்தனை வழிகள்

செல்லாத பேர்களில்லை சத்திரம் போல் திறந்த வாசல்கள்

அனுமதிக்க தேவையில்லாத நுழைவுகள் வெளிநடப்புகள்

குதிரைக்கு கண்களில் மறைப்பு பயணத்தின் அவசியங்கள்

மாளிகைக்கு மணிக்கதவுகள் மரியாதையின் சின்னங்கள்

படைப்பில் பல சாபங்கள் முயன்றால் அவையே வரங்கள்

Tuesday, July 3, 2012

பாவம்

குறைவாக இருந்தது எங்கும் வசூல்


பெட்டிக்குள் சுருண்டுகொண்டது ரீல்

பச்சையாய் கொச்சையாய் வசனம்

கசாப்புக்கடையாய் ஓடும் ரத்தம்

க்வாட்டர் மப்பில் வாலிபர் கூட்டம்

கிளுகிளுப்பாய் குமரிகள் குத்தாட்டம்

அதிநவீன அசகாய அசாத்திய சூரத்தனம்

அக்கரை பசுமையில் காதலர் நடனம்

எதைக் குறத்தேன் நடிகையர் உடை தவிர

தயாரிப்பாளர் குழம்பித் தவிக்கிறார் பாவம் IndiBlogger - The Indian Blogger Community
IndiBlogger - The Indian Blogger Community