அல்ல அல்ல இது இருளல்ல
ஒளியின் நிழல் கூடவே வரும்
அல்ல அல்ல இது இரவல்ல
பகலின் ஆயத்தம் பொறுத்திரு
அல்ல அல்ல இது வலியல்ல
உடலின் உயிர்ப்பு ஓர் எச்சரிக்கை
அல்ல அல்ல இது முடிவல்ல
துவக்கத்தின் அறிகுறி அறியாயோ
வருடம் முடியுது புதியது பிறக்குது
வருக வருகவென வரவேற்றிடு
No comments:
Post a Comment