இரையாகும் துளி சத்தமும் துண்டு காட்சியும் ஐம்புலன் வழி செல்லும் அத்தனையும் மேலும் கூரான இளம் மூளைத்திறனும் கற்பனாசக்தியும் விழுங்கும் நம் சிறு மழலை செல்வங்களுக்கே
குடுக்கணும் வாங்கிய கடனை வட்டியோடு வானம் நினைத்தது மிக்க கரிசனத்தோடு நீண்டன நீர்க்கோடுகள் வெள்ளிச் சரம் சரமாய் நெளியாத நேர்கோடுகள் அத்தனையும் அம்பாய் நளினமான வயலின் இசையாய் வருட சாரலாய் நந்தியின் கை மத்தளமாய் சண்டமாருதமாய் மண்ணும் குளிருது மனமும் சிலிர்க்குது மறுபடியும் மறுபடியும் நிகழும் மாயமிது
நானே இதை நம்பவில்லை நினைத்தே பார்த்ததில்லை நிகரில்லா இணைய தளம் நித்தம் எனை ஈர்க்குமென்று நீண்டு விரிந்ததிந்த வலை நீர் நிலம் தாண்டிய நட்பலை நன்மை தீமையின் கலவை நல்லதை அறிவது கலை
அந்தாதி பாடிக் களிப்பது அந்தி மாலை பொழுதுக்கு அத்தனை உவப்பானது அவ்வப்போது நாங்கள் கூடி அற்புதமான பாட்டுக்களை அள்ளி விடுவது குதூகலம் அங்கே வயது வரம்பின்றி அழகிய நிலவொளி நிரம்ப அரங்கேறும் கொண்டாட்டம் அன்பான குடியிருப்பிலுண்டு
சிதறாட்டம் பெண்ணின் சிந்தனையில் சிரித்தால் ஏன் சிரித்தாய் என்கிறாள் சினந்தால் முகம் கருத்து வாடுகிறாள் சந்தேகம் பேயாய் அவளை ஆட்டிட மனக்குரங்கு கிளைக்குக் கிளை தாவ மணவாளன் பாடுதான் திண்டாட்டம்
வாழ்கிறாயா நலமாய் தண்ணீர் போதுமா வெளிச்சமும் நிழலும் சரியாய் கிடைக்கிறதா காலையில் விழித்ததும் பாசமாய் கேட்கிறேன் வாசலில் வளர்க்கும் அத்தனை செடியிடமும் பச்சை முகங்களிலே எத்தனை பரவசம்
நல்லோரால் நாடும் வீடும் சிறக்கும் எல்லா கிழமையும் பண்டிகை ஆகும் அவரோ மிக அரிதாகவே அவதரிப்பர் அதிசய நிகழ்வாக அவர் தோன்றுவர் நாள் மாதம் வருடம் மூன்று எண்ணும் பத்தென அழகாய் அரிதாய் நாட்காட்டியில் நாளை நாம் காணும் அபூர்வம் போலவே
நல-விரும்பியோரையே முதலில் பார்க்கலாம் விபத்து இயற்கை சீற்ற அழிவு கொடிய இழப்பு ஏற்பட்ட அடுத்த கண்மே சடுதியில் களமிறங்கி களைப்பின்றி உழைக்கும் அந்த நல்ல இனம் வாழ்க
தகுமோ என்று யோசிக்கவில்லை தைரியமாய் இரு முதிய தோழிகள் அங்காடித் தெருவில் அலைந்து அதையும் இதையும் வாங்கி மனம் போல் உல்லாசமாகவே பொழுதையும் காசையும் கரைத்து பை நிறைய பொருள் சுமந்து வீடு திரும்புகையில் களைப்பில்லை ஆண்களோடு செல்வது தொல்லை அனுபவம் இனிதாய் இருப்பதில்லை புரியாத உண்மையிது அனைத்து பெண்களும் ஒருமனதாய் சொல்வது
இன்பமே என் வீட்டில் காதல்பறவைகள் காட்சி வித வித வண்ணங்கள் சளசள பேச்சுக்கள் துருதுரு பார்வைகள் அழகான கொஞ்சல்கள் ஊஞ்சல் ஆட்டங்கள் பல வித சப்தங்கள் சின்னஞ்சிறு கிளிகள் கூண்டுச் செல்லங்கள்
நட்சத்திரம் என்றால் வைரம் குழந்தை பாடும் பாட்டிலே பாரதிக்கோ வெறும் வைரமல்ல கருநீலப் பட்டுப் புடவையில் பதித்த நல் வைரமாம் அது கண்ணம்மாவின் கரிய விழி அதன் சுடர்தான் சூரியசந்திரர் என்னே மயக்கமது மயக்குது கவியின் உவமை மயக்கம் தருதே தனிக் கிறக்கம்
ஏது பண்டிகை என்று என்னுள்ளே குழப்பம் வழியெங்கும் வாழைமரம் வீதியெல்லாம் குதூகலம் அதற்குள் சித்திரையா திருவிழா வந்துவிட்டதா மெல்ல உறைத்தது அது எந்திரன் வெளியிட்ட நாள் ரசிகர்கள் கொண்டாட்டம் வியப்பின் விளிம்பில் நான்
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.