Thursday, January 22, 2015

முழுமதி

IndiBlogger - The Indian Blogger Community நீரே பகுத்தறிய வேண்டும்
நேரே மேலே கீழே உள்ளே
பரந்த மனதுடன் பார்ப்பீர்
யானை தடவிய குருடன்
ஓர் அரைகுறை அறிவாளி
தேவை நமக்கு முழுமதி

நல்ல நாள்

IndiBlogger - The Indian Blogger Community சக்தியம்மா ஊறுதம்மா
உச்சி முதல் பாதம் வரை
பிடித்த வேலைகள் இப்போது
பிடித்த சந்திப்புக்கள் இன்று
சவாலான சாதனைகள் பல
இருக்க தினமும் நல்ல நாள்

மேடுபள்ளங்கள்

IndiBlogger - The Indian Blogger Community தெரியுமே தெள்ளத்தெளிவாய்
சமுதாயத்தின் மேடுபள்ளங்கள்
அலமாரி நிறைக்கும் சேலைகள்
இரண்டாம் முறை உடுத்த அலுப்பவை
மாற்றுத் துணியில்லா அபலைகள்
ஜனநாயகத்தின் கொடிய அவலங்கள்

Friday, January 9, 2015

அழகு

IndiBlogger - The Indian Blogger Community அழகே தன்னை அறியாது
காண்பவரே பாக்கியசாலி
முழுதாய் ரசிக்கவல்லார்
சால சிறந்ததும் அதுவே
தன் அழகில் சொக்கியவன்
கண்ணெடுக்காமல் ஏங்கி
உருகியே செத்தொழிந்தான்
கருத்துள்ள கதை தான்
இறைந்து கிடக்கு அழகு
பக்குவமாய் பருகப் பழகு

Thursday, January 8, 2015

விதியே

IndiBlogger - The Indian Blogger Community நெஞ்சில் கபம்
கொடியதோர் சாபம்
உலுக்கும் இருமல்
நாட்டு காட்டு மருந்து
அனைத்தும் முயன்றும்
இல்லையோர் பலன்
சாவின் விளிம்பில்
ஊசலாடும் உயிர்
கொல்லாமல் கொல்லும்
கொடியதோர் வதை
உச்சி வான் ஓசோன் 
உடம்புக்கு நல்லதாம்
தரையில் உலாவுவது
இப்படி வாட்டுமாம்
பனி வாடை காத்து
பக்குவமாய் இருந்து
தப்ப முடியவில்லை
மூப்புடன் கைகோர்த்து
மார்கழி இளிக்கிறது
மூச்சிரைத்தே சாவதல்ல 
என் இறப்பின் கனவு
மதியை வெல்லும் விதியே
ஏன் என்னை சோதிக்கிறாய்

Tuesday, January 6, 2015

விட்டு விடுதலையாகி

IndiBlogger - The Indian Blogger Community போய்விட்டார் பயந்து பணிந்த பாவையர்
தொழுவில் கட்டிய பசுக்கள் இங்கில்லை
வெருட்டி விழித்து விவாகரதத்தென்று 
வீராப்பாய் மீசை முறுக்கினால் இன்று
ஆஹா எவ்வளவு எனக்கு ஜீவனாம்சம்
விட்டு விடுதலையாகி பறப்பாளே பூவை

Monday, January 5, 2015

பெண்ணின் பெருமை

IndiBlogger - The Indian Blogger Community மறைந்திருந்தது என்ன
அறிவாயா ஆண்மகனே
பிறந்த வீட்டை மாற்றி
பின்னுள்ள பெயரை மாற்றி
வாரிசுகளை பெற்றெடுத்து
கொடியுடை தொலைத்து
சுய விருப்பங்கள் மறந்து
பழைய நட்புகள் துறந்து
பம்பரமாய் என்றும் சுழன்று
பளிச்சென பொழுதும் நின்று
நட்ட இடத்தில் தழைத்து
அல்லும் பகலும் உழைத்து
அலுப்பும் களைப்பும் மறைத்து
பழகிய பல செலவை குறைத்து
உன் வீட்டை துலங்க வைக்கும்
உன்னவளின் உள்ளத்தின் உள்ளே
உள்ளது வெறும் சின்ன ஆசைகள்
அன்பான ஒரு வார்த்தை போதும்
ஆதரவாய் அரவணைப்பே தேவை
அறிவாய் பெண்ணின் பெருமை
போற்றுவாய் அவள் அருமை
IndiBlogger - The Indian Blogger Community