Friday, May 24, 2013

எது சாத்தியம்

IndiBlogger - The Indian Blogger Community ஏதுமின்றி எது சாத்தியம்
நெருப்பின்றி புகையா
நீரின்றி நிலமா
கடலின்றி கரையா
வேரின்றி மரமா
பூவின்றி காயா
உடலின்றி உயிரா
ஊடலின்றி காதலா
நிஜமின்றி நிழலா
ஐயமின்றி தெளிவா

Monday, May 20, 2013

ஞாயிற்றுக் கிழமை

IndiBlogger - The Indian Blogger Community ஞாயிற்றுக் கிழமை சிறப்பை இழக்கும்
ஏழில் ஒன்றாய் சாதாரணமாய் நிற்கும்
மாறுதலின்றி விடிந்து முடிந்து போகும்
ஏனெனில் இது ஒரு இலையுதிர் காலம்

Thursday, May 16, 2013

விலை

IndiBlogger - The Indian Blogger Community பக்குவத்தை நான் காணேனே
ஆடம்பரமான புது சொகுசுகளிலே
வெக்கைத் தொல்லை மறையவே
வந்த மின்விசிறியும் போதலியே
அறிவியல் ஒரு தந்திரம் தந்ததே
குளிரூட்டும் யந்திரமும் வந்ததே
வேர்வை சுரப்பிகளுக்கு ஓய்வே
கழிவுகளற்ற சிறுநீரகம் மட்டுமே
ஓயாது உழைத்து மூப்படையுதே
நாகரிக பவுசுக்கு விலையிதுவே
கண்ணை விற்று ஓவியம் வாங்கவே
விரைகின்றனர் இத்தலைமுறையினரே

Tuesday, May 14, 2013

மூடனே

IndiBlogger - The Indian Blogger Community நெஞ்சம் பதறுது
அங்கம் உதறுது
காதிலே விழுந்தது
கெட்ட கெட்ட சேதி
காடுகளை அழித்து
குரங்கினம் ஒழித்து
பல்லுயிர் தொலைத்து
தொழில்கள் வளர்த்து
முன்னேற்றமாயிது
மங்குது உன் அறிவு
மண்ணை தலையில் தானே
கொட்டிக்கொள்ளாதே மூடனே

Monday, May 6, 2013

திணிக்கப்பட்டத் துறவுப் பாதை

IndiBlogger - The Indian Blogger Community சென்றுவிட்டான் காளை
வென்றுவிட்டான் காதலை
கொன்றுவிட்டான் பாசத்தை
பாவம் அந்த அறியாப் பேதை
புத்தன் அணைத்த கோதை
திணிக்கப்பட்டத் துறவுப் பாதை

Friday, April 26, 2013

மின்னஞ்சல்

IndiBlogger - The Indian Blogger Community சேர்ந்திடுவேன் நொடியில் நான்
காற்றினும் கடிதாய் விரைந்து
மசியில் எழுதி பசையால் ஒட்டி
முத்திரை இட்டு ஊர்தியில் ஊர்ந்து
கதவைத் தட்டாமல் கையில் பெறாமல்
கணத்தில் கிடைக்கும் மின்னஞ்சல்

பாவி

IndiBlogger - The Indian Blogger Community அஞ்சுவதுண்டோ வெறி பிடித்த காமுகர் வன்புணர
புதிய மலரை பூக்காத மொட்டை காய்ந்த சருகை
பதறுது நெஞ்சம் துடிக்குது உடம்பின் அணு அனைத்தும்
எத்தனை கருடபுராண தண்டனைகள் போன்றவை கேட்டும்
எத்தனை கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகள் கேட்டும்
எரிக்கும் கொடிய நரகச் செந்தீயின் வர்ணனை கேட்டும்
பயமறியா பாவிகள் இவரை என்னவெலாம் செய்யலாம்
கொடுக்கும் சித்ரவதையில் நடுங்க வேண்டுமடுத்த பாவி 
IndiBlogger - The Indian Blogger Community