Thursday, May 16, 2013

விலை

IndiBlogger - The Indian Blogger Community பக்குவத்தை நான் காணேனே
ஆடம்பரமான புது சொகுசுகளிலே
வெக்கைத் தொல்லை மறையவே
வந்த மின்விசிறியும் போதலியே
அறிவியல் ஒரு தந்திரம் தந்ததே
குளிரூட்டும் யந்திரமும் வந்ததே
வேர்வை சுரப்பிகளுக்கு ஓய்வே
கழிவுகளற்ற சிறுநீரகம் மட்டுமே
ஓயாது உழைத்து மூப்படையுதே
நாகரிக பவுசுக்கு விலையிதுவே
கண்ணை விற்று ஓவியம் வாங்கவே
விரைகின்றனர் இத்தலைமுறையினரே

2 comments:

  1. வித்தியாசமான சிந்தனை! அழகான கவிதை! நான் இப்போது தங்கள் விசிறியாக்கும்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி, மாலினி! குளிர்ச்சியாயிருக்கிறது!

      Delete

IndiBlogger - The Indian Blogger Community