Friday, May 4, 2012

கறை

கறை கையில் படிந்துவிட்டதென


கழுவுகிறாள் கழுவுகிறாள்

கழுவிக்கொண்டேயிருக்கிறாள்

கொலை செய்த லேடி மேக்பெத்

அரேபியாவின் அத்தனை வாசனை திரவியமும்

அந்த சின்னக் கையின் கறையை கழுவிட போதாதாம்

குருதியின் வாடை குற்றத்தின் சுமை துயில் தொலைக்கும்

கவிஞரின் மொழியின் அழகும் ஆழமும் அடடா என்னென்பேன்IndiBlogger - The Indian Blogger Community

பகவான்

பெருமாள் பெரிய புத்திசாலி பகவான்


பாவிகளும் அப்பாவிகளும் தேடி வர

பெரிய லட்டும் பெரிய உண்டியலுமுண்டு

பெரிய நாமம் கரிய முகத்தை மறைக்க

பொன்னாபரணங்கள் மலைமேனி மூட

பச்சை கற்பூர தீர்த்தம் துளசி கமழ்ந்திட

போதாததற்கு பொங்கல் புளியோதரை

பிரசாதங்கள் மடப்பள்ளியில் மணக்க

பக்தி காணுது புதுப் புது அர்த்தங்கள்

பரவசமாய் சேவிக்கின்ற அடிபொடிகள்IndiBlogger - The Indian Blogger Community

Thursday, May 3, 2012

ஜன்ம சாபல்யம்

செல்ஃபோனிடமும் டிவி ரிமோட்டிடமும்


தீராத பகையும் வெறுப்பும் தொடர்கிறது

அவற்றை இயக்கும் கம்ப சூத்திரம் மிரட்டுது

கிழட்டுக் குதிரைக்கு புது வித்தை வராது

வேண்டாத, மனம் வேண்டாத அநாவசியங்கள்

கர்ணனின் கவச குண்டலமாய் அனைவர்க்கும் கைபேசி

ஆற்றும் வினைகளோ ஆயிரம் எல்லோர்க்கும் செல்லம்

ஏனோ மயக்கவில்லை என்னை இதுவரைக்கும்

பண்பலை வரிசைகள் பாட்டோடு ஊர் சங்கதியை

பாங்காக வழங்கக் கேட்பதின்பம் எனக்கு

சின்னத்திரை சித்திரங்களோ சித்திரவதைகள்

சீரியல்களில் சிரிப்பாய் சிரிக்கும் கருமங்களில்

சிக்காத சின்ன மீன் மாட்டிக்கொண்டது இணைய வலையில்

இணையில்லா இன்பப் பெருவெளியில் என் ஜன்ம சாபல்யம்

IndiBlogger - The Indian Blogger Community

போதாதா

பாடத்தை பட்டுத்தான் படிக்கணுமா


தீயை தொட்டுத்தான் சூடறியணுமா

பட்டவர்கள் பட்டதை பார்த்தவர்கள்

மூதுரையும் பழமொழியும் போதாதாIndiBlogger - The Indian Blogger Community

Wednesday, May 2, 2012

ஓர் இடம்

கிடைக்கவில்லை ஓர் இடம்


கையிலிருக்கும் திரவியத்தை

கண் காணாமல் ஒளித்து வைக்க

களவு போகாமல் பாதுகாக்க

கசிகிறது வட்டு கருப்பட்டியாய்

கரைகிறது உறைந்த பனிக்கட்டியாய்

காப்பாற்றவே முடியாமல் போகுமோ

கடலில் கரைத்த பெருங்காயமோ

கனவித்தனை நிறைவேறிய இன்பத்தை

கரை சேர்க்கும் கலங்கரைவிளக்கத்தை

கசப்பின்றி கடைசி நொடியை கடக்கவென

கை பிடித்து நடத்தும் தன்னம்பிக்கையை

காற்றில் கரையாத கற்பூரமாய் காக்க

கருவூலமாய் கனிந்த மனமது உதவுமாIndiBlogger - The Indian Blogger Community

Tuesday, May 1, 2012

பேரின்பம்

பாட்டீஈஈ..


செல்லப்பேத்தியின் அபயக்குரல்

ஈரக்குலை பதறியது

என்னாச்சோ ஏதாச்சோ

சின்டிரல்லாவை சித்தெறும்பு கடிச்சதோ

அரோராவுக்கு ஆராரோ பாடணுமோ

பார்பி கண்ணாடியை தொலைத்துவிட்டாளோ

பெல்லாவுக்கு பேரிக்காய் வேண்டுமோ

கூப்பிட்ட குரலுக்கு போட்டது போட்டபடி

ஓடி வந்து நிற்பது பேரின்பம்IndiBlogger - The Indian Blogger Community

பாசம்

ஏதோ ஒரு ரகசியம் ரத்த உறவின் பிணைப்பில்


பிள்ளைகளின் ருசி பெத்தவளுக்குத் தெரியும்

பெத்தவளின் பாசம் பிள்ளைகளுக்குத் தெரியும்

காதங்கள் பிரிக்காத பாலமாய் பிணைத்திருக்கும்IndiBlogger - The Indian Blogger Community
IndiBlogger - The Indian Blogger Community