நாட்காட்டியில் தாளை கிழித்தேன்
கடைசித்தாளை பார்த்து அதிர்ந்தேன்
முந்நூத்தி அறுபத்தி ஐந்நு நாளா முடிகிறது
எப்படி எப்படி என வியக்கிறேன்
அடடா முடிகிறதே என்பேனா
ஏறி இறங்கும் ரங்கராட்டின சவாரி
புயல்கள் பூசல்கள் பூரிப்புகள் புதுமைகள்
வானவில்லின் அத்தனை வண்ணங்களுமுண்டு
பிடித்ததும் பிடிக்காததுமாய் விநோத நிகழ்வுகள்
எதிர்பார்த்ததும் எதிர்பாராததுமாய் மர்மமான கலவை
நல்லதும் அல்லாததுமாய் அரங்கேறிய காட்சிகள்
நடந்தது நடக்காதது படைத்தவன் தீர்மானம்
கலைந்தும் கலையாமலும் கனவுகள் தொடர்கதை
நம்பி நம்பி நாளை நகர்த்தும் நித்திய வாடிக்கை
ஆண்டவன் ரசிக்கும் ரகசிய வாணவேடிக்கை
கொண்டாட்டமும் திண்டாட்டமும் தராசு தட்டிலே
படையாளியின் விளையாட்டில் பகடையாய்
உதைபடும் பந்தாய் இயக்கிய எந்திரமாய்
ஆண்டாண்டு காலமாய் இருப்பதறிந்த பின்னே
பரிபூரண சரணாகதியில் புதிய அத்தியாயம்
போற்றி போற்றி போற்றி
No comments:
Post a Comment