சதுரங்கள் கட்டி கருத்தாய் காத்து வட்டங்கள் போட்டு வாகாய் வளைத்து கயிறுகள் சேர்த்து இசைவாய் இழுத்து எல்லைகள் வகுத்து வளமாய் வளர்த்து புலன்கள் பகுத்து பதமாய் வாழ்ந்து களங்கள் கடந்து கனவாய் கரைந்து இறகுகள் முளைத்து இலகுவாய் பறந்து நினைவுகள் நிலைக்க அகலும் உயிரே
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.