மலரும் நினைவுகள்: இந்த விளையாட்டை எத்தனை பேர் விளையாடியிருக்கிறீர்கள்? பாட்டி வீட்டில் கூடும் சிறுவர் சிறுமியரின் சுவையான விளையாட்டு- ஒருவரை முதுகை நிமிர்த்தி குப்புற படுக்க வைத்து மீதியுள்ளோர் அவர் முதுகின் மேல் உள்ளங்கையை விரித்து வைக்க ஒரு தலைவர் ஏதாவது ஒரு சிறு பொருளை(கல், பட்டன், சோவி, புளியங்கொட்டை போல ஏதாவாது ஒன்று) வரிசையாக ஒவ்வொரு கையிலும் வைத்து எடுத்து கடைசியில் ஒரு கையில் வைத்துவிட்டு படுத்திருப்பவரை எழுப்பி யார் கையில் பொருள் இருக்கிறது என்று ஊகிக்கச் சொல்வதுதான் விளையாட்டு- இதை விளையாடும் போது பாடும் பாடல்:
அடுப்பில கிடந்த முதுக்கம்பழத்த யார் எடுத்தா?
காமன் எடுத்தான்
காமன் தலைல கொள்ளி வைக்க
உருண்டேன் திரண்டேன்
என்று பாடிக் கொண்டே அனைவரும் ஒரே மாதிரி கைகளை மூடிக் கொண்டு கைகளை தேய்த்து உருட்டுவதும் கண்டுபிடிக்க வேண்டியவர் ஊகிக்க திணறுவதும் செம்ம ஜாலியாக இருக்கும்.

No comments:
Post a Comment