மறந்து போகவில்லை கும்மென்று வீசும் ஆளை அசத்தும் மயக்கும் மணம் மதுரைக்கு வந்த சோகமான சோதனை பனிக்கட்டியில் வைத்த பழைய மல்லிகை பார்க்க மட்டும் அழகு பறந்ததுவே வாசனை
நகைச்சுவை உணர்வோடு நெருங்கி அடுத்தடுத்து வரும் அலையென அடுக்கடுக்காக கதை சொல்லியே கடலை போடும் காதல் மன்னர்கள் வலையில்லாமல் மீன் பிடிக்கையில் சிக்குவது விதி நழுவுவது மதி காண்
கனவு வரும் இரண்டு வித வேளையிலே உறக்கத்திலும் விழித்திருக்கும் போதும் உறக்கத்து கனவு மறையும் நீர்க்கோலம் கண் விழித்தபடி காணும் கனவு கத்தி கலாம் விரும்பியபடி தீட்ட வேண்டியது கதையில் வரும் பால்க்காரி குடம் போலுடைந்து வீணாய் போகாமல் விழிப்புடன் முனைப்புடன் அடியெடுத்து வைத்து அடைய வேண்டிய இலக்கு
தவறில்லை தவறுகள் என்று பழைய தலைமுறைகள் பழக்கி பெரும் பூதமாய் வளர்ந்ததின்று ஊழலெனும் கொடிய நோய்க்கிருமி தவறில்லை தவறுகள் என்று சீர்திருத்தங்கள் பல வந்தனவே பெண்கள் குழந்தைகள் வாழவே பகுத்தறிவும் பரிவும் போற்றுவோம்
புன்னகை புரியத் தெரிந்திருப்பது முதல் தகுதி முக்கியத் தேவை பொதுமக்களின் தொடர்பு சேவைக்கு மலர்ந்த முகம் தெளிவான ஒப்பனை பொறுமையான பதில் பணிவு தயவு அலுக்காதோ எந்திரப் பதுமைகளுக்கு
கத்திரிக்கோல் வெட்டியது பட்டை நறுவிசாய் அளந்து பிசிறின்றி பேசிய வார்த்தைகள் துல்லியமாய் விளங்கியது எடுத்த முடிவு தொடர்ந்தே வரும் தண்டவாள இடைவெளி ஒட்டாத உறவின் மாற்றமில்லா போக்கிது பறக்க விரும்பியது என் வீட்டு படித்த கிளி
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.