Saturday, September 18, 2010
மீனாச்சிக்காக
மீனாச்சிக்காக ஊரெங்கும் திருவிழா
மல்லியப்பூ மணக்கும் சித்திரையிலே
மாசி வீதியிலே தினமும் ஊர்கோலம்
மனசெல்லாம் நிறைஞ்சிருக்கும் காலம்
அன்புத் தங்கச்சிக்கு சீரோடு வர்ராரு
அண்ணன் அழகரு வைகை ஆத்தோட
கொட்டிக் கிடக்கு பவுர்ணமி நிலா
கூடிக் கிடக்கு பல ஊரு சனம்
பந்தல் போட்டு அன்னமும் பானமும்
பரிமாறும் பஞ்சமில்லா பக்தியிருக்கு
வெள்ளந்தியா திரியுது கூட்டமிங்கு
வெல்லமா இனிக்குது ஆத்தா ஆட்சி
Subscribe to:
Post Comments (Atom)
Very nice
ReplyDeleteஅழகருக்கும் அம்மனுக்கும் அழகுக்கு ஏது குறைவு? அவர்களை பற்றி பாடும் கவிக்கும் குறை ஏது?
ReplyDelete"வெள்ளந்தியா" என்றது மதுரை வட்டார வழக்கு போலும்!
Thank you! I am born and bred in Madurai!
ReplyDelete