Thursday, September 30, 2010
நிலவோடு
அமெரிக்காவால் நிலாவுக்கு ஆளை அனுப்ப முடிந்ததிப்போ
ஆனா எங்க ஊரு பாட்டி அங்கே எப்பவோ குடியேறியாச்சே
வெள்ளிக்கிண்ணத்தில் பாலன்னம் உண்ணும் பாலகர் பார்த்திட
கண்ணுறங்கும் முன் கேட்டு கிறங்கிட நாம் சொல்லும் கதை
அன்று வந்த அதே நிலவு இன்று காணும் காட்சி வேறென
கவிதை வரிகள் படைக்கும் பழைய உறவு நமக்கு நிலவோடு
Friday, September 24, 2010
மாதரே
Saturday, September 18, 2010
மீனாச்சிக்காக
மீனாச்சிக்காக ஊரெங்கும் திருவிழா
மல்லியப்பூ மணக்கும் சித்திரையிலே
மாசி வீதியிலே தினமும் ஊர்கோலம்
மனசெல்லாம் நிறைஞ்சிருக்கும் காலம்
அன்புத் தங்கச்சிக்கு சீரோடு வர்ராரு
அண்ணன் அழகரு வைகை ஆத்தோட
கொட்டிக் கிடக்கு பவுர்ணமி நிலா
கூடிக் கிடக்கு பல ஊரு சனம்
பந்தல் போட்டு அன்னமும் பானமும்
பரிமாறும் பஞ்சமில்லா பக்தியிருக்கு
வெள்ளந்தியா திரியுது கூட்டமிங்கு
வெல்லமா இனிக்குது ஆத்தா ஆட்சி
மீண்டும்
சின்னக்குழந்தையின் சிமிழ் வாய் சிரிப்பில்
சிக்கனமில்லை பாகுபடுத்தும் பாவமில்லை
கொஞ்சும் மொழியில் கெஞ்சும் விழியில்
கொஞ்சம் கூட வஞ்சமில்லை நஞ்சுமில்லை
சின்னத்தலையில் தீய சிந்தனையில்லை
சீண்டிப்பார்க்கும் சின்னத்தனமில்லை
சூதுவாது தெரியாத பருவம்
கள்ளம் கபடு அறியாத உள்ளம்
எவரையும் எதையும் நம்பும் எளிமை
அழகான அமுதான அஞ்ஞானம்
ஆவலை மறைக்கத் தேவையில்லை
அன்பை மறுக்கத் தோன்றுவதில்லை
எழுதாத வெள்ளைக் காகிதம்
பிசையக் காத்திருக்கும் களிமண்
உளியால் செதுக்கிடவோர் சிற்பம்
இறைவன் எழுதிய அற்புத நவீனம்
விதியின் மதியின் கையிலோர் விடுகதை
வினையும் விபரமும் கலக்கும் தொடர்கதை
வளர வளரத் தேயும் அதிசய நிலவு
பழகப் பழக மாசுறும் அனுபவ உலகு
சறுக்கல்கள் சமரசங்கள் பல கண்டு
சர்க்கரையோ உப்போவென மயக்கம் கொண்டு
கருப்போ வெள்ளையோ எதுவென கலங்கி
சம்மதமில்லாப் பல கரைகளில் தங்கி
ஏன் வளர்ந்தோம்? எப்படி திரிந்த பாலானோம்?
இழந்த பரிசுத்தம் நிரந்தரமானதோர் இழப்போ?
இறைவன் கருணைக்கு எல்லையில்லை
இயற்கையில் எதுவும் இறப்பதில்லை
துவக்கத்தைத் தொட்டு முடியும் வட்டம்
மீண்டும் குழந்தையாகும் முதிய கட்டம்
பொக்கை வாயிலே வெள்ளை சிரிப்பு
பிரம்மானந்தத்தின் வழி வந்த களிப்பு
நினைவில் எதுவும் நிற்பதில்லை
நிலையாய் எதிலும் நாட்டமில்லை
நேற்றும் நாளையும் பொருட்டில்லை
நின்று போயிருக்கும் காலக்கடிகாரம்
Thursday, September 2, 2010
Subscribe to:
Posts (Atom)