அமுதம் உண்ட களிப்பு வெற்றி தந்த உவப்பு அதிலே ஒரு வேடிக்கை நமக்கும் உள்ள வாடிக்கை குருவி உட்கார விழும் பனம்பழம் நெல்மணிக்கு சீட்டெடுக்கும் கிளி ஆக்டொபஸ் காட்டும் சமிக்ஞை ஆரூடம் சொல்லும் உயிரினங்கள் புதிது புதிதாய் உருவாகுது உற்சாகம் கரை புரண்டோடுது
பணமுதலைகளால் பொருளாதாரம் ஆடுது பொதுநலன் பதுங்குது பாரெங்கும் ஏற்றதாழ்வு பார் எங்கும் போராட்டம் பேராசை தணியாமல் பசியோடு அலைகிறார் பாவந்தான் பாமரன் பயந்திருக்கும் சிறுமீன் பசிக்குது அவனுக்கும்
பழிப்பான் பாமரன் பொருள் உணராமல் பெரியோர் கூட்டும் பெரிய கூட்டம் பார் வியக்கும் பளபள திருவிழா பசி மறந்து பிணி மறைத்து பிணக்கு மூடி பிடிக்கும் கொடி பெருமை தேடி பிதற்றும் மொழி பிறழும் வழி பணத்தை இறைத்து படைத்த விருந்து பெருமை தமிழுக்கு பொறுமை இலார்க்கு பொறாமை ஏதுக்கு
Postgraduate in English literature; a happy and contented housewife; reading & writing are my hobbies; I love beauty in Nature, words, thought & conduct.