Monday, April 5, 2010

தர்மம்


IndiBlogger - The Indian Blogger Community




கண்டிக்கிறான் கண்காணிக்கிறான்
கண்டபடி திட்டித் தீர்க்கிறான்
காட்டுமிராண்டிபோல் நடக்கிறான்
கடுமையாய் ஆதிக்கம் செய்கிறான்
கட்டுப்பெட்டியாயிருக்கச் சொல்கிறான்
கட்டுப்பாடுகள் பலவும் விதிக்கிறான்
கைகட்டி சேவகம் செய்யச் சொல்கிறான்
கண்ணீரில் தினம் மிதக்க வைக்கிறான்

அவனியல்பு மரபணுவின் ஒரு ஆதி கோளாறு
அதை வெல்லும் சங்கதிகள் உன்னிடமுளது
அனுசரித்துப் போய்விடு பொறுமை காட்டிடு
அன்புக்கு அடங்கும் முரட்டுக்குழந்தையவன்
அப்படி இப்படி இன்று இருந்தாலும் விரைவிலே
அடங்கிக் கிடப்பான் சாதுவாய் உன் நிழலிலே
அழகான குடும்பத்தின் ஆணிவேராயிருந்திடு
அறிவாய் உன் ஆட்சியின் அகண்ட எல்லையை

உனக்கென்ன குறைச்சல் எதிலே மட்டம்
உரிமைகள் இல்லாத பதுமை நீயல்லவே
உலகம் தெரியாத ஒரு பேதையுமல்லவே
உணர்ச்சியில்லா பொம்மையா பெண்டாட்டி
உருட்டிப்பார்த்தால் திருப்பி முறை நீ
உரக்கக் கத்தினால் எதிர்த்துப் பேசு
உக்கிரமாய் போராடு விட்டுக்கொடாதே
உன் நியாயங்கள் உறுதியாய் நிற்கட்டும்

அன்றும் இன்றும் கண்ணோட்டம் வேறு
ஆட்டம் கண்டது வாழ்வின் அடித்தளம்
அடங்கச் சொன்ன பெரியவர் இன்றில்லை
ஆடச் சொல்பவர் ஆதரவு அதிகமானது
அதிலே பலியாகிப்போகுது இனிய நல்லறம்
ஆயிரம் காலப் பயிருக்கின்று அற்பாயுசு
அவசரமான காலத்தின் அவதியில் சிக்கி
ஆவியை விட்டது அரிய இல்லற தர்மம்

2 comments:

  1. I find this poem full of contradictions!

    1.If a man's male chauvanistic attitude has genetic mapping, how a woman's patience and support will rectify that shortcoming?
    2."அனுசரித்துப் போய்விடு பொறுமை காட்டிடு"...then u contradict ur own words by saying >>>
    "உணர்ச்சியில்லா பொம்மையா பெண்டாட்டி
    உருட்டிப்பார்த்தால் திருப்பி முறை நீ
    உரக்கக் கத்தினால் எதிர்த்துப் பேசு
    உக்கிரமாய் போராடு விட்டுக்கொடாதே "
    !!!!!!!!!!

    After all..That's wht today's women follow..

    ReplyDelete
  2. In this poem I'm just putting side by side 2 stands taken- one in olden times by parents and elders described in the 2nd stanza, another is the present day advice whereas the 1st stanza is constant make-up of male psycho: tackling technique has changed and as the last stanza laments I'm not very satisfied with the adverse side effects of such a change! I fail to understand how you misunderstood me as contradicting!

    ReplyDelete

IndiBlogger - The Indian Blogger Community