உணராரோ இங்கிவர் உணராரோ
அறிவியல் வளர்ச்சி அபாரந்தான்ஐம்புலனுக்கும் சுகம் அதிகந்தான்அத்தனை கண்டுபிடிப்பும் அருமையேஆனாலும் கொடுக்கும் விலை என்னகொஞ்சமும் சிந்திக்காமல் திளைக்கயந்திரங்கள் அடுக்காய் வீட்டுக்குள்நுழைந்தபின் சிரமமின்றி சடுதியில்வேலைகள் முடிந்தாலும் அவயங்கள்வேலையிழந்து நோய்கள் பழகியதேஇயல்பாய் கிடைத்த உழைப்பை உடற்பயிற்சியிலே தேடியும்உடலும் இளைக்கவில்லை பிணிகளும் ஒதுங்கவில்லைஎங்கும் எப்போதும் வேண்டும்செயற்கை குளிரூட்டல் எனில்வியர்வை சுரப்பிகள் வீணாகிகழிவகற்றி தேயுதே கிட்னியும்இயற்கையோடு ஒன்றி வாழாதுஇயந்திரங்களோடு பிணைந்துபிழையாகுதே வாழ்க்கை முறைபுத்திசாலித்தனம் போனதெங்கே
முன்னே போனால் முட்டி
பின்னே சென்றால் உதைத்துமுடக்குதே படுத்துதே அய்யோநான் பாவமில்லையா மூப்பே
ராகங்கள் காதுக்கு குளிர்ச்சி
வண்ணங்கள் கண்ணுக்கு விருந்துவாசங்கள் நாசிக்கு மருந்துபோவோமா காட்டுக்குள்ளே
கடையில் தானே வியாபாரம் கொழிக்குது
இணையத்தில் விரித்த சந்தையிலேகத்திரிக்காயும் வீட்டு வாசல் வருமோபடி தாண்டி போகவும் வேண்டாமோ ஆச்சர்யங்கள் இன்னும் என்னென்னவோமனித தொடர்பை தொலைக்கும் விதியோமுகம் பார்த்து பேசாமல் வர்த்தகமோயந்திரங்களுடன் மட்டும் வாழ்க்கையோ
என்றபுள்ள அறிவுக் கொழுந்தல்லவா
அவ அறியாத சங்கதியுமுண்டாஅச்சமில்லாம நடக்குறா நேராபோகாத இடமெல்லாம் போறாவானத்த வில்லா வளைக்குறாமாறாத பழைய பயபுள்ளனதாமாபாதகமெல்லாம் செய்யுறான்போகப்பொருளாத்தான் பாக்குறான்
நீ சொல்வது தவறென்று
நக்கீரனாய் உரைத்தாள்மறுத்த மாதொருத்திமாதராய் பிறந்திடவே மாதவம் செய்திருக்கும்கவிமணியின் ரசிகை என்கருத்தை இப்பெண் பிறவி சாபமில்லை வரமே என்றுவக்கணையாய் நான் வடித்தஇணையக் கட்டுரைக்குகடுப்பாய் பதிலிட்டாள்வாதங்கள் பல வைத்தாள்எதுவும் எனக்கு ஏற்பில்லைநகைப்பே வந்தது படித்துஆணுக்குக் கொடுத்தது பலகோடி விந்தணுக்கள்பெண்ணுக்கு வழங்கப்பட்டதோஒரேயொரு சினை முட்டைமாதத்திற்கு ஒரு முறைபுரியவில்லையா இதிலேயேபாரபட்சமான நிலையைபடைக்கும் வித்தைக்கு போதும் ஒரு முட்டைபலசாலி பெண்ணுக்குபாவம் ஆணுக்குத்தான் பலகோடி வேணுமடிபதில் சொன்னேன் நானும்பைத்தியக்காரி ஒருத்திக்கு
அவனுக்காய் உருகியே
சமைத்து சிங்காரித்துசிந்தித்து சிரித்து எனதன்னை தொலைத்தவள்தேடிப் பிடித்த சுயமின்றுமுன்னே நிற்கிறது காண்