Monday, October 12, 2015

தீர்ப்பு

IndiBlogger - The Indian Blogger Community முழுதாய் மனதைத் திருடிவிட்டாய்
முற்றிலும் என்னை மாற்றிவிட்டாய்
என்னை எனக்கே தெரியவில்லை
எதுவும் முன்போல் இப்போதில்லை

நினைவை அழித்து கனவை நிறைத்து
நிலை தடுமாறி நிற்க வைத்தாய்
உன் விரல் நுனி கட்டளையில்
இயங்கும் இயந்திர பொம்மையானேன்

பொல்லாத மாயம் செய்தாய்
கல் மனதை கரைத்துவிட்டாய்
சொல்லாத சுகமிதுதானோ
வெல்ல இனியேதுமுளதோ

தந்திரங்கள் பல செய்து
ஆயுதங்கள் பல கொண்டு
அடியோடெனை வீழ்த்திவிட்ட
அழகான கொடும்பாவாய்

உள்ளங்கை நெல்லிக்கனி போல்
உன் குற்றமிங்கு நிரூபணம்
நீதிமன்றம் செல்ல வேண்டாம்
வாதிட்டு விளக்க வேண்டாம்

நானே சொன்னேன் தீர்ப்பினை
தந்தேன் தகுந்ததோர் தண்டனை
அடைத்தேன் நெஞ்சக் கோட்டைக்குள்ளே
ஆயுள் கைதியாக்கிவிட்டேன் உன்னையே

அல்லும் பகலும் காவலுண்டு
அதில் அணையாத காதலுண்டு
இமைக்குள் இருக்கும் கண்மணியாய்
இருப்பாய் என்னுள் பத்திரமாய்

தாங்குவாயா

IndiBlogger - The Indian Blogger Community துரும்பு இவள்
துன்புறுத்தலாம்
வக்கில்லாதவள்
வதைக்கலாம்
திக்கில்லாதவள்
துரத்தலாம்
இதுதானே உனது கணிப்பு
அதில் அளவில்லா களிப்பு
விதை தான் சிறியது
விருட்சமோ பெரியது
சின்னப்பயலே தெரியாதா
சின்னவள் பலம் புரியாதா
எரிமலையை தீண்டாதே
கடும்புயலை தூண்டாதே
நாகத்தை சீண்டாதே
நஞ்சை கக்க வைக்காதே
விடியலை நானும் தேடட்டுமா
புதிய பாதையை வகுக்கட்டுமா
குனிந்த தலையை நிமிர்த்தட்டுமா
விஸ்வரூபம்தனை காட்டட்டுமா
வெப்பத்தை நீயும் தாங்குவாயா
வெந்து பின் புதிதாய் எழுவாயா

பலன் என்ன

IndiBlogger - The Indian Blogger Community மலர்களின் மடியில் மயங்கும் தேனீக்கள்
மகர்ந்தம் சுமந்து பரப்பும் தவறாமல்
இயற்கை தளைக்கும் தொடரும் மகிழ்வாகவே
மானிடர் மதுவுண்டுருண்டால் பலன் என்ன

இல்லை

IndiBlogger - The Indian Blogger Community இப்பூலகில் பூக்களுக்கு பாதுகாப்பில்லை
பொய்களுக்கு ஒரு போதும் பஞ்சமில்லை
புகழுக்கும் பதவிக்கும் பறக்க தவறுவதில்லை
பாவமும் புண்ணியமும் அளக்கும் படி இல்லை

உயர்வு தாழ்வு

IndiBlogger - The Indian Blogger Community உயர்வு தாழ்வு வராது பிறப்பில்
வளராது வளத்தில் கல்வியில்
தண்ணீர் மட்டத்து தாமரையாய்
நிமிர்ந்து நிற்கும் நல்லொழுக்கத்தால்

ஆவோமோ பூஜ்ஜியங்கள்

IndiBlogger - The Indian Blogger Community கிட்டுமே கனவுகள்
எட்டுமே வானங்கள்
வசப்படுமே ராஜ்ஜியங்கள்
ஆவோமோ பூஜ்ஜியங்கள்

பிழைப்பாய்

IndiBlogger - The Indian Blogger Community பழகு நடிக்க
பாப்பாவாய்
அப்பாவியாய்
வெகுளியாய்
பிழைப்பாய்
மேடையிதில்
IndiBlogger - The Indian Blogger Community