Monday, October 12, 2015

பிழைப்பாய்

IndiBlogger - The Indian Blogger Community பழகு நடிக்க
பாப்பாவாய்
அப்பாவியாய்
வெகுளியாய்
பிழைப்பாய்
மேடையிதில்

தேனடை

IndiBlogger - The Indian Blogger Community மனம் அடையுது ஒரு பரவசம்
அழகிய காட்சியில் லயிக்கும்
இனிய பாடலில் மயங்கி கிடக்கும்
கற்பனை படைப்பில் அது கரையும்
ரசிக்கத் தெரிந்த ஓர் பிறவிக்கு
ருசிக்கும் தேனடைதான் வாழ்வு

துவளேன்

IndiBlogger - The Indian Blogger Community தோல்வியே துணிவாயோ என்னுடன் மோத
ஆற்றோர நாணல் நான் அறியாயோ இன்னும்
அமிழ்ந்து அமிழ்ந்து நிமிர்வேன் மூழ்காமலே
முறிந்திடும் முருங்கை மரமென்றெண்ணாதே
துவளேன் தொடர் துன்பம் வந்திட்டாலுமே
காலனை காலாலுதைத்த பாரதி பக்தையிவள்

நீயம்மா

IndiBlogger - The Indian Blogger Community

நீயம்மா நீயேதானம்மா
உன் விதியை எழுதுவது
அடிபட்டு மிதிபட்டு அபலையாய்
கண்ணீரில் உழல்வாயா
கல்வியும் காசுமிருந்தும்
அவலமாய் வாழ்வாயா
எதையெல்லாம் சுமப்பாய்
எத்தனை காலம் ஏமாறுவாய்
தியாகச்சடரே தெய்வமே
தேயத்தான் சந்தனம்
எரியத்தான் கற்பூரம்
உன் சந்நிதியிலிருப்பது
சாத்தானா தேவனா
தகுதியுள்ளவனை இருத்து
துஷ்டனை துவம்சம் செய்
அண்டத்தை ஆளும் நாயகியே
ஆக்கும் அழிக்கும் சக்தியே
வழி காட்டும் ஜோதியே
பலியாகாதே வீணே ஈனருக்கு
பலமாகு விளக்காய் வாழ்வதற்கு
பாம்பிற்கு விஷத்தையும்
தேளுக்கு கொடுக்கையும்
பரமன் ஏன் கொடுத்தான்
இழப்பதற்க்கினி ஏதுளது
உயிர் மட்டுந்தானே மிச்சம்
போர்வீரக்குண்டோ அச்சம்
உயிர் அவர்கென்றும் துச்சம்
போரில் வலிக்குமோ சாவு
பகைவனிடம் தோல்வியளவு
கவ்விய தர்மத்தை சூது
துப்பிட காத்திருப்பாயா
நெஞ்சு பொறுக்குதில்லையேயென
நெக்குருகிய நல்வீணை பாரதி நீயா
கயமை கண்டு வெகுண்டு
பொசுக்கக் கிளம்புவாயா 
அவன் கண்ட அக்னிக்குஞ்சாய்
திக்கெட்டும் கொட்டட்டும் முரசு
அறியட்டும் அடக்கிப் பழகியவர்
அழியுமினி அதர்மமும் அநீதியுமென
தடம் பிறளா தேவியே
தன்மான வீரியே
களம் வெல்ல வருவாயா
கோபுரங்கள் சாய்வதில்லை
கணக்குகள் தவறுவதில்லை
காலப்பந்து உன் கையில்
கலங்காதே கவலை விடு

என்ன

IndiBlogger - The Indian Blogger Community வாழ்வதற்கு வகுத்த நேரம்
நொடிகள் சிலவாய்
வருடங்கள் பலவாய்
வரமாய் சாபமாய்
ஈர களிமண்ணாய்
கையில் கண்டாய்
என்ன பிசைகின்றாய்
பிள்ளையாரா குரங்கா

வாணிபமா

IndiBlogger - The Indian Blogger Community மறுக்கபடுவதற்க்கு முளைக்குமே
மனம் போல காரணங்கள் பல
கருப்பு குண்டு ஏழை இவை நிரந்தரம்
மெத்த படித்தது குற்றம் அன்று
வேலைக்கு போகாமல் இருந்தால் இன்று
வெண்டைக்காயை முறித்துப் பார்த்து
முருங்கைக்காயை முறுக்கிப்பார்த்து
வாங்கிடும் வாணிபமா வாழ்க்கை
சந்தைப்பொருளாய் நீ நீடிப்பாயா
பேரம் பேசப்பபோவதினி நீயம்மா

பயன்படாது

IndiBlogger - The Indian Blogger Community மனசாட்சியை பூட்டிவை பத்திரமாய்
ரகசியமாய் யாரும் நெருங்கமுடியாமல்
போகுமிடமெல்லாம் தூக்கிச்செல்லாமல்
பெருஞ்சுமையது பெருந்தடையுமது
பேராசைக்கும் பாவமனைத்துக்கும்
பொல்லா தீங்கெதற்கும் பயன்படாது
IndiBlogger - The Indian Blogger Community