பிள்ளையின் பசியும் ருசியும் தெரிந்தவள்
பார்வையிலே உள்ளத்தை படித்துவிடுபவள்
பக்குவமாய் கனவுகளை நடத்திக்கொடுப்பவள்
தாதியாய், வாத்தியாய், தோழியாய் நிற்பவள்
மாறாத, அழியாத உள்ளங்கை ரேகை
முள்தோலுக்குள் பதுங்கிய பலாச்சுளை
கற்பாறைக்குள் ஊறும் குளிர்சுனை
உறைகின்றாள் அன்னை என்ற சொல்லுக்குள்ளே
அன்னை
பிறந்ததும் பிரித்திடுவர் தொப்புள்கொடியை
பிரிக்க யாருளர் அன்னையின் ரத்த உறவை
பிள்ளைக்கனியோ பிடுங்க வந்த கட்டெறும்போ
பிடித்துக்கொள்வாள் உடும்பாய் ஆயுளுக்கும்
பிடித்துக்கொண்டிருந்த முந்தானை கூட மறக்கும்
பின்னாடியே நின்ற பிள்ளையை மனம் மறக்காது
பதவியில் பெரிய பதவி பெற்றதாய்
பிறவிப்பயனடைந்து பூரிப்பாள்