Wednesday, October 30, 2013

தடை

IndiBlogger - The Indian Blogger Community தியாகம் செய்யணுமாம்
மகள் வளர்ந்ததும்
அலங்காரமாய் பூணுவதை
மருமகள் வருமுன்
ருசியாய் தின்னுவதை
அவ்விருவர் தடை
இன்பம் அனுபவிக்க
எந்த நொந்த கிழம்
சொன்னதிது அறியேன்
நேரெதிர் என் வாழ்வில்

Thursday, October 24, 2013

சந்தோசம்

IndiBlogger - The Indian Blogger Community ஐயா புது யுகமிதில்
படித்தவன் பாமரன்
யார் அறிவாளியென
அறிந்தேன் கதையிதில்
குறுக்கு சந்தொன்றில்
ஒருநாள் ஷோக்கான
குட்டிப்பூனையொன்று
தன வாலை உயர்த்தி
சுற்றி சுழன்று நெடுநேரம்
ஆடக் கண்டது ஓர்
பெரிய பூனையுந்தான்
என்ன செய்கிறாய் என்றது
மிடுக்குடன் குட்டிப்பூனை
பெரிய படிப்பு படித்தேன்
வாலில் உள்ளது சந்தோசம்
என்றே கற்றதையொட்டி
பிடிக்க முயல்கிறேன் அதை
என்றவுடன் சொன்னது 
பெரிய பூனை எளிமையாய்
நான் பெரிய படிப்பேதும்
படித்தேனில்லை ஆயினும்
அறிவேன் சந்தோசம் என்
வாலில் உள்ளதென என்
வேலைகளை நான்பாட்டுக்கு
செய்து வர வால்பாட்டுக்கு
என் பின் வருகிறதாக்கும்
அதனுடன் சந்தோசமும்
சாதாரணமாய் சொல்லிவிட்டு
கிளம்பியது சோலியைப் பார்க்க

Wednesday, October 16, 2013

இலக்குகள்

IndiBlogger - The Indian Blogger Community 
விஞ்ஞான வளர்ச்சியில் விளைந்த யந்திர புரட்சியால் உலகில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிட்டது. கட்டைவண்டியில் பயணித்த காலம் போய் ஜெட் பிரயாண காலம் வந்துவிட்டது. புறாக்காலில் கடிதம் கட்டி அனுப்பிய காலம் போய் ஈ மெயிலில் நொடியில் தொடர்பு கொள்ளும் வசதி வந்துவிட்டது. காலம் பொன்னாகவே ஆகிவிட்டது.
உலகம் சுருங்கி மின்னணு கிராமமானது. உள்ளங்கையில், விரல் நுனியில் உலகம் கட்டுப்பட்டுக் கிடக்கிறது. இன்றைய மனிதன் தன் மூதாதையர்களை விட மிகவும் சுகவாசியாக, ஆரோக்கியமாக, நீண்ட ஆயுளுடன் வாழ்கிறான். இதெல்லாம் அறிவியல் ஆராய்ச்சியால் கண்ட ஆரோக்கியமான விஷயங்கள்.
நிஜமும், நிழலும் சேர்ந்தே இருப்பது போல இந்த அபரிமிதமான வளர்ச்சிக்கு ஆரோக்கியமற்ற பக்கவிளைவுகளும் சேர்ந்தே வளர்ந்து பெரும் பிரச்சினையாகிவிட்டன.
அதற்காக காலச்சக்கரத்தை பின்னோக்கி நகர்த்த முடியாது, கூடாது- மின்சாரத்தை மறந்துவிட்டு மெழுகுவர்த்தியுடன் இருளில் புழங்க முடியாது. பிரச்சினைகளை அலசி ஆராய வேண்டும், அறிவுபூர்வமாக தீர்வு காண வேண்டும்.
மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் பெரிய வீடுகளில் அண்ணன், தம்பி குடும்பத்தினர் கூட்டமாக வாழ்ந்து வந்தனர். பொது வருமானம், பொது பராமரிப்பு, பொது நன்மைகள். அனைத்து வயதினருக்கும் போதுமான கவனிப்பும், போதுமான பாதுகாப்பும் இருந்தது. அடுத்து உத்தியோக நிமித்தமாய் இளம் தலைமுறையினர் கூட்டுகுடும்ப முறையிலிருந்து பிரிந்து வெளியூரில், வெளிநாட்டில் வாழத்துவங்கினர். அடுத்து வந்தது பெண்களும் வேலைக்கு செல்லும் புதுப் பழக்கம். முன்பும் பள்ளிகளில், ஆஸ்பத்திரிகளில், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை பார்த்தார்கள். அவர்கள் விகிதம் சிறியது. அவர்களெல்லாம் பெரும்பாலும் கணவனை இழந்தபின் தன்னைத்தானே கௌரவமாக காப்பாற்றிக் கொள்ள நினைத்தவர்கள், கல்யாணமே வேண்டாமென முதிர்கன்னிகளாய் இருந்துவிட்டவர்கள், வெளியே போய் வேலை செய்வதில் சம்பாதிக்கும் காரணத்திற்கு நிகராக ஒரு சேவை நோக்கத்தையும், அதற்காக சிற்சில தியாகங்களை மனமுவந்து செய்யும் மனப்போக்கையும் கொண்டவர்கள்-இப்படித்தான் இருந்தது நிலைமை.
இன்றோ பெண்கள் வேலை செய்யாத இடமே இல்லை.. அரசு அலுவலகங்களில், வர்த்தக நிறுவனங்களில், வங்கிகளில், சாஃப்ட்வேர் நிறுவனங்களில் என சிறிதும் பெரிதுமான பல அலுவலகங்களில் பெண்கள் பணிபுரிகிறார்கள். இந்த இடங்களில் இவர்களுக்குப் பதிலாக பணி புரிய ஆண்கள் இல்லையா, ஆண் ஜனத்தொகை குறைந்துவிட்டதா? இல்லை. பெண்களுக்கு தங்கள் சாமர்த்தியத்தை நிரூபிக்க வாய்ப்புகளும், ஆதரவும் அதிகரித்துவிட்டன. படிப்பில் முன்னேறி வேலை வாய்ப்புகளை போட்டியிட்டு கவர்ந்து ஆண்களை விட அதிக முயற்ச்சியுடன் பணியிடங்களை கைப்பற்றிக்கொண்டிருக்கின்றனர். இதை எத்தனை ஆண்கள் உணர்ந்து உண்மையாக முன்னேற- பெரும்பான்மை பணிகளை தக்கவைத்துக் கொள்ள- முயல்கிறார்கள்? திறமை குறைந்த, வேலையில்லா இளைஞர்கள் கூட்டம் பெருகி வருகிறது. பெண்களை சீண்டுவது, சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது எல்லாம் அதிகரித்துவிட்டது.
ஆண்கள் மட்டுமே சம்பாதிப்பவர்கள், குடும்பத்தை சம்ரட்சிப்பவர்கள் என்ற கருத்து மறைய ஆரம்பித்துவிட்டது. பெண் சம்பாத்தியத்தில் குடும்பத்தின் வசதிகளும், வளர்ச்சியும் கிடைப்பதில் கௌரவகுறைச்சல் எதுவும் இப்போது கிடையாது.
குடும்பங்களில் பணத்தேவைகள் பெருகிகொண்டே போகின்றன. வயிறார உண்ணவும், முழுதாக உடுத்தவும், ஆரோக்கியமாக வாழவும் மட்டும் விரும்பும் எளிய மனப்பான்மை மறைந்துவிட்டது. மேலும் மேலும் வசதிகள் தேவைப்படுகின்றன. சந்தையில் விற்கும் அனைத்தின் மேலும் ஆசை வருகிறது. போதுமென்ற மனமில்லை. எதிலும் திருப்தி அடையாத, இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்க முயலும் மனோபாவந்தான் எங்கும் பரவியுள்ளது. வரதட்சிணை கொடுமை குறையவில்லை. ஒரு பெண்ணின் திருமணம் இன்னமும் ஒரு மிகப் பெரிய செலவினமாகவே இருக்கிறது. இவையெல்லாம் பெண்களை வேலைக்குச் செல்ல உந்தித்தள்ளும் காரணங்கள். இருநூறோ, இரண்டாயிரமோ, இருபதாயிரமோ சம்பளமாக வாங்கிவிடமென்ற முனைப்புடன் எல்லா தட்டுகளிலும் பெண்கள் சுறுசுறுப்பாக இயங்குகிறார்கள்.
பின்னணி இப்ப்டையிருக்கும்போது பெண்ணின் தாய் பதவிக்குத்தான் சோதனை பெரிதாக வந்துள்ளது. முன்பு போல முழு நேரத்தையும் தன் குழந்தைக்காக ஒதுக்க முடியவில்லை. அன்னையின் அன்புக் கவசம் விலகி எடுப்பார் கைப்பிள்ளையாக வயதான பாட்டியிடம், கூலிக்கு அமர்த்தப்பட்ட தாதியிடம் வளர வேண்டிய சூழ்நிலை. பள்ளிப்பிராயத்து பயங்களும், ஆசைகளும், கவலையற்ற, களங்கமற்ற மனப்பான்மையுமில்லாமல் வயதுக்கு மிஞ்சிய முதிர்ச்சியுடன் அனுபவங்களை சந்தித்தாகவேண்டிய கட்டாயம். பெரிய மனுஷ தோரணையுடன் நடந்துகொள்ள வேண்டிய நிர்பந்தம். குருவி தலையில் பனங்காய். 
குழந்தையின் ஏமாற்றங்கள் விபரீதமாக வடிகால் காண்கின்றன. பெற்றவளின் குற்ற உணர்ச்சியும் குழந்தையை கண்டிக்க தடையாய் இருக்கிறது. இருபக்கமும் அடிமனதில் இழப்பு உணர்ச்சி. ஈடுகட்ட இருக்கவே இருக்கிறது பணத்தால் வாங்க முடிந்த அநாவசிய ஆடம்பர சுகங்கள். உடல் உபாதைக்கு மருத்துவர்கள் இருப்பது போல் மனச்சிதைவை தீர்க்க மனோதத்துவ நிபுணர்கள் தோன்றியுள்ளனர். 'நாயை அடிப்பானேன்.....சுமப்பானேன்?'
ஆணுக்கு நிகராய் பொருளாதார மேம்பாட்டுத்துறையில்நுழைந்துவிட்ட பெண்ணின் பிரத்தியேக, ஏகபோக தாய் ஸ்தானம் ஆட்டம் கண்டுவிட்டது. பிறந்த சின்னஞ்சிறு சிசுவுக்கு பரிந்து பாலூட்ட, பள்ளி செல்லும் பிள்ளைக்கு காது கொடுத்து ஊக்குவிக்க, தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட பருவப்பிள்ளைக்கு வழிகாட்ட பெண்ணிற்கு இப்போது பொழுதில்லை, உடல் பலமில்லை, ஆசையில்லை. புதிய தொடுவானக்கள் விரியக்கண்டவள் பந்தயக்குதிரை போல் ஓடுகிறாள். அனுபவித்து வாழ வேண்டிய இல்வாழ்க்கையை, அந்தந்த கணத்து சந்தோஷங்களை, வருங்கால தூண்களை செதுக்கும் சிறப்பான பணியை சில பல லகரங்களுக்காக இழந்து வருகிறாளோ இன்றைய பெண் என்றே தோன்றுகிறது.
கணவனும் மனைவியும் தங்கள் அலுவலகத்தில் இடமாற்றம் கிடைக்காமல் வெவ்வேறு ஊர்களில், வெகு தொலைவில், வருடக்கணக்கில் பிரிந்திருந்து ஆளுக்கொரு குழந்தையுடன் குடித்தனம் செய்வது வேடிக்கையான விஷயம். என்ன மிஞ்சுகிறது இங்கே? வாலிப வயதின் இனிமையான தாம்பத்தியமும், சகோதர பாசமும், ஒருவருக்கொருவர் அன்னியோன்யமாய் பகிர்ந்துகொள்ளும் குடும்ப உறவும் பலியாகவில்லையா?
குடும்ப உறவுகள் போற்றப்படாத அந்நிய கலாச்சாரத்தின் அமசங்கள் நம் நாட்டிலும் அரங்கேற ஆரம்பித்துவிட்டன. வயதான பெற்றோர் சுமையாய் போனார்கள்-முதியோர் இல்லங்கள் முளைத்தன. பிள்ளைகள் சுமையாய் போனார்கள்-குழந்தை காப்பகங்கள் அவசியமாகிவிட்டன. 
இன்று பிரபலமாகிவிட்ட சித்தாந்தம்: பெண் சந்தனமல்ல, பிறருக்காக தன்னைத் தேய்த்து அழிந்து போக. பெற்றோர், கணவன், குழந்தைகள் யாருக்காகவும் தன் சுய அபிலாஷைகளை அடக்கிக்கொள்ளப்போவதில்லை. போலியான அந்தஸ்தும், வறட்டு கௌரவும் கானல் நீராய் துரத்த இப்பிறவியின் உவப்பான இன்பங்களை விட்டு வெகு தூரம் விலகி விலகிப் போகிறாள். எதை இழந்து எதை அடைகிறாள்? இலக்குகள் மாறிவிட்டன!

Until divorce doth part us

IndiBlogger - The Indian Blogger Community Until divorce doth part us
“Marriages are made in Heaven” is the good old saying. The newly added clause is “ and  they are broken in divorce courts”.
It is a serious matter of concern that the institution of marriage is gradually losing its respectability and stability. There is an alarming increase in the rate of divorce in India, a country known to be traditionally conservative.
Divorce has been a common occurrence in the West for more than two generations. Men and women change their partners as easily as changing their dress. Marriage vows no longer bind them till death as they did in the past. Famous personalities are known to create a sensation by cancelling their marriage just a few hours after walking up to the altar.
What has happened to the solemnity of marriage? Why is divorce, the legal separation, becoming increasingly popular all over the world? Why do husbands and wives now choose this easy, quick solution to marital maladjustments? Why do they decide their marriage is irreparable?
A number of factors like change of lifestyles, lack of parental guidance, shifting of priorities from moral values to material comforts, emancipation and empowerment of women through their education and opportunities for economic  self-sufficiency and an overall shallow perception of life’s meaningfulness lie behind this modern malady.
In the past. In our Indian patriarchal society men were wielding gigantic powers. They ruled as lords inside and outside the home. Women were almost slaves surrendering themselves unquestioningly to the menfolk who were the decision-makers.
Women could not protest against a drunkard husband, an unfaithful husband or a cruel, beating husband. Such masculine attributes were looked upon as normal. Indignities and insults were part and parcel of the life of married women. They got accustomed to subjugation and servitude.
That is not to say women were utterly unhappy or they led a thoroughly wretched life. It is only to emphasise the status of women in the family and society- perhaps a little above cattle and chattel!
With the advent of a social Renaissance in the last century brought about by great thinkers and leaders many of the evils afflicting women were eradicated. Illiteracy, child marriage, sati and woes of widowhood are some.
Women who were hitherto confined to home and hearth stepped out into the wide world outside and became aware of their legal rights and choices. Many positive results were the outcome. A totally more enlightened society of intelligent families emerged.
But the pendulum now seems to swing to the opposite extreme. Women who had evinced utmost endurance for centuries are now thinking of renouncing the virtue of patience completely. A defiant unwillingness to adjust to disagreeable circumstances or happenings is observable. All that should healthily boost woman’s self-confidence are now sadly nurturing an unpleasant arrogance and over-confidence in her.
Nowadays the marriage age for women is rising higher and higher. Past the age of tender malleability, with deep-seated preferences, tastes, habits and beliefs,a woman entering into marriage finds herself at a disadvantage regarding adjustment, in strong contrast to her mother and grandmother.
Girls who patiently adjusted themselves to teachers in schools, elders and siblings at homesuddenly turn antagonistic and uncompromising to husband’s relatives. In-law confrontations are a major cause for divorce in India. Harassments associated with dowry are also fuelling separations.
Ego clashes between the couple are more common when both husband and wife are earning members of the family. In the past generations there was a clear allocation of work for men and women. But now household chores are no more taboo to men. Men wedded to career women have to share domestic workload inevitably. Though men know it is only fair to help at home, generations of male chauvinism embedded in their genes makes it tough for them to bend, to adjust to their new role.
Woman in spite of her new emancipation and empowerment, in spite of increasing awareness about gender equality is not able to conquer the hard facts of her biology. She has to cope with her inherent physical weaknesses associated with menstruation and childbirth. The stress and strain of career women can be so taxing as to affect their physical and emotional stamina.
At such times lack of sufficient sympathy and cooperation from the husband can be highly disappointing and devastating paving the way for estrangement. It is not difficult to visualize scenes which make the home a battlefield. The wife’s financial independence encourages her to assume a stand of nonchalance. The male ego finds it hard to brook disobedience.
Formely, there was a stigma attached to a divorcee; people looked askance at her. But keeping abreast of advanced countries of the world thought patterns in India also have changed. Divorce is no more anathema to us. Bright prospects await a divorcee. Hence women feel no regrets, have no scruples about pushing accumulated petty quarrels to the steps of divorce courts.
For a dependent wife of former times scope for freedom was nil. Bleak were the chances of her parents accepting her back. The sordid conditions of solitary living have now changed completely. There are any number of women’s hostels to provide shelter and plenty of job opportunities for skilled, educated women. So many women do not wish to compromise to the demands of their marriage partners be they fair or not.
A surprisingly unforeseen factor seems to be working behind many marriage misfortunes: the small family concept which has taken root in most of the educated families. One or two children in the family of the present times enjoy a more pampered life than the children of bigger families of former times. They grow up having their way without much necessity to give in to anyone for anything. The pangs and pleasures of sharing are unfamiliar to them.
When they grow up they marry a person who grew up in the same egoist manner. Then marriage becomes a fencing game of offences and defences. Neither of them is willing to give in. The ultimate and only solution, they think, is divorce. Do either win by this decision? Is life going to turn into a quest for a more suitable partner? Do the bruises of the first marriage get completely healed over the subsequent marriages? Without a compromising/adapting mentality will not the search for the perfect partner be wearisome and futile?
Despite their academic achievements, excellent intelligence many men and women are in reality immature kids emotionally. They revel in a meaningless game of tit for tat and end up in divorce spoiling a meaningful relationship. In most cases divorce is sought for silly, untenable reasons. Mountains are made out of molehills. Solvable problems are blown out of proportion to look like insurmountable hurdles.
Life is not a bed of roses. When a man and a woman born and brought up in entirely different background/surroundings start living together as married couple, when they get to know each other’s likes and dislikes very closely disagreements and arguments are bound to arise. They should be sorted out, talked over and ended amicably. But in today’s world of haste and impatience, of competition and short-term goals couples resort to divorce with little or no attempt to patch up. Of course, it could be highly excruciating  for one party to keep on suffering patiently. But it pays in the end, does it not? Easily frustrated young people fail to realize this.
In today’s nucleus family system, the absence of experienced, wise elders to smoothen the frictions, to pacify the warring parties is a great loss to the couple and the children. The children are the worst affected by divorce. It is a pity the parents do not stop to consider the trauma and sense of insecurity their wards are forced to experience for no fault of theirs. There is no predicting in what ways and how deeply divorce will affect the children.
Next to elders of the family marriage counselors are the second best choice for saving marriages.
In today’s world of cultural globalization there is a glaring openness about sex and sensuality. Even in India inhibitions are shed, thanks to the omnipresent, omnipotent Media. Temptations are teeming everywhere and indulgence in sensual pleasures is the fashion of the day. As a natural corollary marital infidelity and suspicion on the part of either of the partner is becoming more evident: a fertile ground for reaping divorce.
Curiously, there is another important complication leading to divorce. Increasing pressures at workstations are generating this new malady of the era: impotency. A valid reason for divorce. Modern woman is not coy like her grandmother. She refuses to sacrifice like her mother. She lives for her only. Her needs are the top priority. Aching for instant results is the general mood prevailing today.
Gone are the days of self-effacing, satisfied, sagacious women whose maternal instincts ruled over their mind and body, who lived for others thereby finding their own lives meaningful. Unlike the women of the past era today’s women are not willing to suffer meekly any form of violence, physical or verbal abuse from their men. And pathetically men are struggling yet to come of their inherited smug, wrongly defined masculine superiority. 
Marriage is no more an art of living for each other. People live in the present without thinking about the future. The increase in divorce rate is a clear reflection of the hard, businesslike, insensitive approach to love and life.
True love forgives and forgets. Today’s love does not. We find a very saddening trend fast eroding faith in the virtuous institution of marriage and heralding a beastly trend of living together fashion. What more are we to live on to witness?

Tuesday, October 8, 2013

கொடுமை

IndiBlogger - The Indian Blogger Community மறுபேச்சு பேசாமல்
தரக்குறைவைத் தாங்கி
மக்கள் மாக்களாய்
மாறுகின்ற கொடுமை
நெஞ்சு பொறுக்குதில்லையே
காடழிக்க காத்திருக்கு
அக்னி குஞ்சொன்று 
ரௌத்திரம் பழகியே
என்னென்று சொல்ல
எப்படி விவரிக்க
பொங்கும் ஆத்திரம்
வார்த்தை தின்றதோ
வாய் செத்ததோ
பித்தாகி திகைக்க
அனலாய் மூச்சு
துருத்தியாய் வீச
அக்கிரமத்தை சொல்ல
அமைதியை தேட
தவிக்கிறேன் நழுவும்
நிதானத்தைப் பற்ற
முயல்கிறேன் நானும்
முடியலையே இன்னும்
குலக்கொழுந்தொன்று
பசுந்தளிரொன்று எங்கள்
பால்வடியும் முக செல்வன்
ஒன்பது வயது பாலகன்
பாட்டியுடன் கொஞ்ச வந்த
அழகிய விடுமுறையில்
பத்து நாளுக்கு முந்தைய
வயிற்றுபாதை திரும்பவே
கூர்மதி கொண்டவளாம்
அனுபவமுள்ளவளாம்
என் பின்னே பிறந்தவளாம்
மருத்துவம் பயின்றவளாம்
எதற்கும் ரத்த பரிசோதனை
பார்த்திடலாமென பரிந்துரைக்க
கையில் கொடுக்கப்பட்ட
சோதனை முடிவுத்தாள்
அணுகுண்டை போட்டது
கிட்டதட்ட நான்கு பங்கு
வெள்ளை அணுக்கள்
சொல்ல நா கூசும்
பொல்லாத நோயின்
காலனின் கைப்பிடியை
கொடிய வேதனையை
சுட்டிக் காட்ட அதிர்ந்தோம்
சிதைந்தோம் மொட்டையாய்
எச்சரிக்கை முறையாய்
சுமக்காத சீட்டினை கண்டு
சீறிய என் தங்கையும்
வேறிடத்தில் மறுபரிசோதனை
செய்திட பணிக்க இரவும் 
துவங்கிட காத்திருந்தோம்
மறு நாள் மறு சோதனை 
முடிவை கையில் வாங்க
வார்த்தது பாலை வயிற்றில்
அந்த இரண்டாம் சோதனை
ஒரு கோளாறுமில்லையென
கண்ணகியாய் எரிக்கக்
கிளம்பியவளை நிறுத்தி
பொறுமை புகட்டினர்
நகரின் உச்ச தரம் கொண்ட
சோதனை கூடத்தில்
மறுநாள் மூன்றாம் முறை 
சோதனை முடித்து அதிலும் 
இருக்கவில்லை பிழையேதும்
சிறந்த குழந்தை நிபுணரையும்
கண்டு தெளிந்த பின்னும் 
ஆறவேயில்லை எனக்கு
நுகர்வோர் நீதிமன்றத்தில்
தண்டனை பெற்றுத் தராது
குடும்பம் அடைந்த துயர்
கொஞ்சமும் ஆறாது
என்றே ஒற்றைக்காலில்
நின்றவள் முதல் சோதனை
மையத்தின் தலைமையை
தொலைபேசியில் அழைத்து
நடந்ததை விவரித்தேன் 
இது நீதியா நியாயமா
நெஞ்சு பொறுக்குமா
அடுக்குமா இக்கொடுமை
பத்திரிகையில் கிழிக்கட்டுமா
கோர்ட்டில் வழக்காடட்டுமா
தொழில் தர்மம் இதுதானா
குமுறினேன் கொதித்தேன்
மழை இன்னும் பெய்திட
காரணனாய் ஒரு நல்லவன்
மறுமுனையில் இருந்து
என் எரிமலையை 
அப்படியே உணர்ந்து
கண்ணியமும் கொள்கையும்
கொண்ட கனவானாய்
கொள்ளை பணிவாய்
மன்னிக்கக் கோரி
எளிதில் மன்னிக்கும் 
சாமானிய குற்றம்
இதுவல்லதான் என்றும்
உடனடியாய் விசாரித்து
நடவடிக்கையாய் அக்கொடிய
தவறு செய்த அலுவலரை
பத்து நாள் பணிநீக்கம் செய்து
பழிவாங்கும் திட்டத்தை என்
மனதிலிருந்து துடைத்தானே
நொந்த மனமும் உடலும்
என்று முழுதாய் தேறுமோ
IndiBlogger - The Indian Blogger Community