Sunday, March 31, 2013

அனுபவம்

IndiBlogger - The Indian Blogger Community அனுபவம் ஆகிறது இன்றொரு கேலிக்கூத்து
ஐம்புலனின் விளிம்பிலோர் தற்காலிக அதிர்வு
ஆழமும் அடர்த்தியும் தொலைந்து போனது
ஆவியை உருக்கி கரையாத உறவாய் ஆனது
ஆயுளுக்கும் நினைவில் இனிக்கும் கல்கண்டு
மூடி மூடி வைத்து பாதுகாத்த மர்ம விருந்து
விரட்டி விரட்டி வென்ற ஆண்மை நிமிர்வு
தவிர்த்துத் தவிர்த்து பெண்மை பெற்ற களிப்பு
கலையாய் கரும்பை ருசித்து மகிழ்ந்த காலமது
ஊகத்திற்கு இடமில்லை திறந்து கிடக்கு அழகு
இன்ப விளையாட்டிற்கு நேரமில்லை இருவருக்கு
பொறுமையில்லா நுகர்வில் சுவை என்ன இருக்கு

Saturday, March 30, 2013

கடன்

IndiBlogger - The Indian Blogger Community கடனாய் நினைக்க முடியாதது கருவறை வாடகை
கடனாய் தீர்க்க முடியாதது திருமண ஒப்பந்தம்
கடனே என பணி புரிந்தால் கிடைக்காது திருப்தி
கடனில் வாங்காத வசதி ஏதும் இன்று இருக்கிறதா

Wednesday, March 27, 2013

மழைக்கு

IndiBlogger - The Indian Blogger Community கல்யாணம் செய்வோமா
கழுதைக்கும் கழுதைக்கும்
முளப்பாரி தூக்கிச் சென்று
பொங்கலிடுவோமா மாரியம்மனுக்கு
வித்வான்களை ராகம் பாடச்சொல்லலாமா
எப்படி நேர்ந்து கொள்ளலாம் மழைக்கு
நல்லவர் ஒருவர் கூட இங்கில்லையா
சான்றோர் சொன்ன உரைகள் பொய்யா

புதிரோ

IndiBlogger - The Indian Blogger Community பாசம் பக்கத்தில் பார்வையில் ஒரு காலம்
குரலாய் குறுஞ்செய்தியாய் கணிணித் திரையில்
குறுகிவிட்ட கலிகாலம் கண் முன்னே காண்பது
முதுமையில் தனிமை அக்கரையில் சொந்தங்கள்
அக்கறையை அருகிருந்து காட்ட இயலாமை
எதிர் வீட்டு முதியவர் புற்று நோய் முற்றி
ஐந்தாறு மாதமென கெடு சொன்ன பின்னே
இரவும் பகலும் குடித்தழிகிறார் அதிக வலி
தனிமையா முதுமையா பொல்லாத நோயா 
ஆண்டவன் கணக்கும் மனிதன் போக்கும் புதிரோ

Tuesday, March 26, 2013

ஆரோக்கியம்

IndiBlogger - The Indian Blogger Community போயே போச்சு பழந்தமிழர் போற்றிய
பழைய பழக்கமெல்லாம் புதைந்து போச்சு

பல் துலக்கிய உடன் பருகியதோ நீராகாரம்
பகல் வேலைக்கு பலமளித்தது பழைய சாதம்
பல்கி பெருகிய நுண்ணுயிர் அதிலிருந்து காத்திட 
நோயும் நொடியும் பல காதம் பறந்து சென்றிட 
புத்தொளியாய் வாழ்வில் ஆரோக்கியம் பொலிந்திட
புது அலையாய் பயமுறுத்தும் பகையாய் புகுந்திட்ட
பொருந்தாத பழக்கமில்லா பலகாரங்கள் நமக்கெதற்கு
பாட்டி செய்த பண்டங்கள் மேல் வேண்டாம் வெறுப்பு

Monday, March 25, 2013

தொடரும்

IndiBlogger - The Indian Blogger Community பேத்தி ஒரு பெரிய சாகசக்காரிதான்
பேரன் அம்மாவை வாலாய் தொடர்ந்து
விடாமல் அரைத்துக்கொண்டிருக்கிறான்
தான் வேண்டியதை பெற்றிட வேண்டி
சின்னப் பொண்ணு அப்பா மடியிலேறி
செல்லமாய் கொஞ்சிக் கொஞ்சி குழைந்து
சாதித்துவிடுகின்றாள் வெகு சுலபமாகவே
இன்று நேற்றல்ல நாளையுமிது தொடரும்

Sunday, March 24, 2013

அடி

IndiBlogger - The Indian Blogger Community அடி உதவுவது போல் அண்ணன் தம்பி 
உதவுவது இல்லை என்றும்
அடியாத மாடு படியாது என்றும்
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகருமென்றும்
பட்டிமன்றத்தின் ஓரணியினர் அடி பின்னிட
அன்பான அணுகுமுறையை அரவணைப்பை
சாத்வீகத்தின் அரிய சாதனையை
அடியின் எதிர்மறை தாக்கங்களை
மற்ற அணி பிரித்து அலசத் துவங்க 
கவனம் கலைத்தனர் சண்டையிட்டு
அலறும் என் புத்திர செல்வங்கள்
விருட்டென எழுந்து தேடினேன் குச்சியை

Saturday, March 23, 2013

உண்மை

IndiBlogger - The Indian Blogger Community உண்மை என்பதென்ன
உரிக்கும் வெங்காயமா
பாலுக்குள் வெண்ணெய்யா
கண்டவர் விண்டிராத
விண்டவர் கண்டிராத
வள்ளுவர் வாக்கில்
தீதிலாதது சொல்லுதல்
புரிந்தவரை போதும்

Thursday, March 21, 2013

நீரின்றி

IndiBlogger - The Indian Blogger Communityநிலை தடுமாறிடலாமோ
நீர்நிலைகள் வற்றலாமோ
நீரின்றி இவ்வுலகு வாழுமோ
நீருக்கு ஏனிந்த சோதனையோ
கண்மாய் மடையடைத்து கல்லூரி
குளமும் ஏரியும் ஆனது குடியிருப்பு
வனமழித்து வான் மழை பொய்த்து
சகல வித கழிவுகளைக் கொட்டி
அம்மம்மா மடமை போதுமம்மா
வளமிதை சேமிக்க வேண்டுமம்மா
சிறு துளியும் கூட வீணாக்காமல்
காப்போம் சந்ததிகள் தவிக்காமல்

பாவமும் புண்ணியமும்

IndiBlogger - The Indian Blogger Community சேர்ந்திடும் பாவமும் புண்ணியமும்
சித்ரகுப்தன் கணக்குப் புத்தகத்தில்
கண்ணுக்குத் தெரியாத நீதியொன்று
போகுமுன்னே பலனை தந்துவிடும்
விந்தையான பல வழிகளிலே இது போல்-
களைப்பிலே ஆற்றங்கரை மர நிழலிலே 
தூங்கிவிட்ட பால்காரன் பணப்பையை
குரங்கொன்று கவர்ந்து கிளை மேலேறி
காசுகளை தரையில் ஒன்றும் ஆற்றில் ஒன்றுமாய்
வீசியதில் தண்ணீர் கலந்து விற்ற பாலின் 
லாபக்கணக்கு நேரானது கேட்டதுண்டு
முற்பகல் செய்தது பிற்பகல் விளைந்தது

Wednesday, March 20, 2013

விலை

IndiBlogger - The Indian Blogger Community தீரும் தன் காலமென்று
தெரியாது சிட்டுக்குருவிக்கு
சின்ன சிங்காரக் குருவிக்கு
அசுர வளர்ச்சி அபார வேகம்
யந்திரமயமாகும் புது உலகம்
வசதியும் சுகமும் உயரும் நிலை
அதற்கு எவ்வளவு பெரிய விலை

Tuesday, March 19, 2013

இனப்பெருக்கம்

IndiBlogger - The Indian Blogger Community சுகிக்கும் வண்டிடம் வண்ணமலர் கிசிகிசுத்தது
ரசிக்கின்ற மதனராஜனே என் மடியில் தூங்கிவிடு
சிரித்தது பொல்லாத வண்டு பூவே பேராசை உனக்கு
சங்கிலியாய் தன் வளம் தொடர இயற்கை காத்திருக்கு
பூப்பூவாய் நானும் தேன் குடித்துச் செல்கின்றபோது
மகரந்தத் துகளெல்லாம் என் உடலில் ஒட்டியெடுத்து
பரிமாற்றம் செய்து பூவின் இனப்பெருக்கம் நடக்குது
சபலமில்லை என் மனதில் பொறுப்பான பணியெனது

Monday, March 18, 2013

புரியவில்லை

IndiBlogger - The Indian Blogger Community தோழி பாத்திரம் தவறாமல் இருக்கும்
பழைய ராஜா ராணி திரைப்படத்திலே
அரசகுமாரியின் அந்தரங்கம் அறிவாள்
அவளுடன் ஆடிப் பாடுவாள் விளையாடுவாள்
காதல் தூதும் சென்று வருவாள் அப்படியே
தலைவனின் தோழனுடன் பிரியமாகிடுவாள்
எத்தனை கதையில் பார்த்தும் அலுப்பதில்லை
இன்று எண்ணுகையில் ஏனென்று புரியவில்லை

Sunday, March 17, 2013

சோகமும் கரையும்

IndiBlogger - The Indian Blogger Community சோகமும் கரையும்
காலைப் பனியாய்
மாலை நிழலாய்
சோப்பு நுரையாய்
வானவில்தானாய்
இசை கேட்கையில்
இயற்கையின் மடியில்
இணைய மேய்ச்சலில்

பாட்டி

IndiBlogger - The Indian Blogger Community ஏளனம் செய்வோர் துணிவில்லாதோர்
ஆசைபட்டபடி அலங்காரம் செய்திட 
மனம் போல் பொழுதை போக்கிட
இணையத்தில் இஷ்டம் போல் மேய
வயதும் பாலும் தடையேயல்ல
சொல்வது ஒரு நவயுகத்துப் பாட்டி

Saturday, March 16, 2013

முக்கியம்

IndiBlogger - The Indian Blogger Community சொன்னேன் என் முடிவை
மேசை முன் அமர்ந்து
இட்லி தோசை பிடிக்கும்
வடை பொங்கலும் நன்று
பூரியும் கிழங்கும் அருமை
பரவாயில்லை இன்றைக்கு
எனக்கும் நான் குல்ச்சா
பிச்சா கார்லிக் பிரெட்
ஃப்ரைட் ரைஸ் ஃபிங்கர் சிப்ஸ்
தொட்டுக்கொள்ள சீஸ் சாஸ்
ஒத்து வாழ்வது முக்கியம்
புதுமையில் நான் ஐக்கியம்

தாபம்

IndiBlogger - The Indian Blogger Community கதவும் ஜன்னலும் மூடிய
இதமான செயற்கைக் குளிர்
ஏனோ எனக்கு பிடிப்பதில்லை
வேர்வையும் தூசியும் பழகியவை
வெட்டவெளி காற்றும் காட்சியும்
தராத சுகமா என்பதென் தாபம்

Friday, March 15, 2013

‘Celebrating Girls, Celebrating Women’.

IndiBlogger - The Indian Blogger Community
(Putting myself in the shoes of my neighbour's teenage daughter. I'm blessed with good neighbours!)

What would you like to be remembered as in this life?
When this question was put before me, at my young age, I felt confused at first. But after thinking seriously about it I tried to picture myself as a grown-up woman loved, respected and wanted by all.

I looked around me for role models whom I can follow easily. Then I realized my mother was the best example of the kind of woman I wanted to become. She is a dutiful wife and a loving mother. She keeps the house clean and beautifully arranged. She cooks delicious and nutritious food. She helps my father in running the family. She helps us children in our studies. She is very good in fine arts like music, painting, embroidery and making lovely works of art. She maintains a beautiful garden.

My mother is very soft by nature and I have never seen her speaking angrily to any one. She is very generous kind-hearted. She readily offers any help she can to anyone who needs it. She is a very good friend to all our neighbours.

I have always admired the nice hospitality my mother reveals while receiving our friends and relatives. Good manners and discipline come naturally to me because my mother is such a cultured lady.

Even though my mother had college education she chose to be a housewife. Family is her first concern. She is also a busy and active woman. She finishes her household work quickly and finds enough time to do extra work for increasing the family’s income. She is a LIC agent and an educational consultant. The lovely greeting cards, wall hangings and artificial flower bouquets she makes bring considerable amount of money. Thus without going to work in any office for constraining hours she is able to earn extra income for the family.

I have never seen her sitting idly for a second. She teaches her painting skill to whoever is interested in learning it. She is keeping in touch with modern trends and has become computer-literate. She has the potential to do small computer-related jobs for further income.
In short my mother inspired me to grow up into a sincere woman who does service with a smile. An educated, caring mother is like a candle that fills the room with light driving out darkness. ”If you want to be happy, make someone else happy”, is a wise saying. It is equally true that happiness is a perfume you cannot pour on others without getting a few drops sprinkled on yourself.
In today’s world of stress and struggle it is a great thing if I can bring cheer, hope and liveliness to my family and surroundings. It is also important to be educated and well-informed. When the mind is enlightened with knowledge there is no place in it for cheap feelings and low thoughts.
The world is full of opportunities. We must look for them. If we cannot get what we like we must learn to like what we get. It will be very useful to develop our ability to adapt to our circumstances. At the same time we must chase our dreams and try our level best to achieve them. To dream and to dare shall be our objectives.

Every girl cannot become a Florence Nightingale or Mother Theresa. But everybody can show charity within their own limits. A poet has long ago said that love of fellow-men is love of God.
Every girl cannot become a great leader like Mrs. Indira Gandhi or Mrs. Bandaranayaka. But we can all develop administrative skills in the small circle we belong to.

Every girl cannot become P.T.Usha or Steffi Graf and win laurels in the world of sports. But we can at least keep ourselves physically fit and healthy, capable of working tirelessly for ourselves and others.

Every girl cannot reach the heights of fine arts like M.S. Subbulakshmi or Rukmani Devi. But we can be artistic enough to add color and light to our homes and neighborhood.

To conclude, I would like to be remembered as a ray of sunshine which was a source of warmth to family and friends. Finally I want to quote an old prayer which is my guiding principle in life.
”O Lord, grant me the strength to change things that need changing, the courage to accept things that cannot be changed, and the wisdom to know the difference.”
 http://www.womensweb.in/articles/celebrating-girls-celebrating-women/

நூதனம்

IndiBlogger - The Indian Blogger Community ஒளி வரும் முன்னே
ஒலி வரும் பின்னே
மின்னலது முந்தும்
இடியதை தொடரும்
ஒலி முந்தும் தருணம்
யானை மணியோசை
ஒலியும் ஒளியும் இணையும்
பெரிய சின்னத் திரைகளில்
கணிணியில் மடியில் கையில்
தகவல் தொடர்பு யுகமிதில்
எண்ணிலா அதிசய சாதனம்
கூடிடும் பரிமாணங்கள் நூதனம்

அழுகை

IndiBlogger - The Indian Blogger Community கண்ணீரால் மாற்றி எழுதப்படும் சரித்திரம்
வயிறு காய்ந்தவர் பொங்கியெழுந்தால் புரட்சி
வேசமான அழுகையும் பாசத்தை அசைக்கும்
அழுத பிள்ளைதான் பால் குடிக்குமென்றறிவர்
கள்ளமில்லா குழந்தையும் கபடமான மாந்தரும்
முதலைக் கண்ணீரை அறிந்திட வேணும் ஞானம்

முயற்சி

IndiBlogger - The Indian Blogger Community பொங்கி வரும் பால் அடங்கும் நீர் தெளித்து
கடலும் மனமும் அடங்குமா கட்டுப்பட்டு
தேசிங்கு ராஜன் கையிலென்ன மாயமிருக்கு
கடுந்தவ முனிவரிடம் எவ்வளவு பலமிருக்கு
கடிவாளம் போட சித்துகள் செய்ய எடு முயற்சி
குவிந்த முனைப்புடன் சாதிக்க உதவும் பயிற்சி

Thursday, March 14, 2013

பதுமைகள்

IndiBlogger - The Indian Blogger Community தெரியவேயில்லை
எண்ணவோட்டங்கள்
ஒப்பனை பூச்சும்
பதறாத பாங்கும்
பணிவான தொனியும்
குலையாத துணிவும்
அபார பொறுமையும்
சலைக்காத பதில்களும்
விலகாத புன்னகையும்
சமயோசித சமாளிப்பும்
வரவேற்புப் பணி பெண்கள்
அதிசயமான பதுமைகள்

சமர்ப்பணம்

IndiBlogger - The Indian Blogger Community அஞ்சலி அஞ்சலி
எங்கும் அஞ்சலி
எல்லாம் அஞ்சலி
அழகான அஞ்சலி
கரையை வருடும்
கடலின் காதல்
மண்ணை மூடும்
மலர்கள் மோகம்
வானில் தவழும்
மேகம் மோகம்
நதியின் சங்கமம்
ஒப்பிலா ஆராதனை
உலகில் உன்னதம்
அன்பின் சமர்ப்பணம்

Tuesday, March 12, 2013

அடக்கம்

IndiBlogger - The Indian Blogger Community குறைவாய் கொடுக்குமாம் தெய்வம்
தன்னிடம் நலன்களை வாங்கிட
பெரிய கூடையுடன் வருபவளுக்கு
நிறைத்து அனுப்புமாம் அத்தெய்வம்
மற்றவள் கொண்டு வந்த சின்னக் கூடையை
வயக்காட்டு உரமாய் பாட்டியின் போதனைகள்
வசவோடும் பழமொழியோடும் கேட்டவள்
வளர்ந்தேன் நேராய் வாழ்கிறேன் நலமாய்
ஒழித்தேன் பேராசை பெற்றேன் அடக்கம்
திருப்தியின் அருமை அறிவீர் அனைவரும்

Sunday, March 10, 2013

பொய் சமுதாயங்கள்

IndiBlogger - The Indian Blogger Community சமுதாயத்தில் கற்றுயர்ந்தோம்
சரித்திரத்தைப் படைத்தோம்
சார்ந்து வாழும் கலையறிந்தோம்
சகோதரர்களாய் வாழ்ந்திருந்தோம்
பார்க்கவும் பேசவும் வினையாற்றவும்
பொதுவான பல இடங்கள் காலங்கள்
பழக்கங்கள் மறந்து வருகிறோம்
பார்க்காமல் பழகி பகிர்ந்து உருகி 
பொய் சமுதாயங்கள் உருவாக்கினோம்
பொழுதுக்கும் அத்தளங்களை நாடி
பறக்கிறோம் புது சமுதாய வானிலே
புரியவில்லை போக்கும் அதன் இலக்கும்

Thursday, March 7, 2013

மருமகள்

IndiBlogger - The Indian Blogger Community மருமகள் மற்றொரு மகள்
பாரம் சுமக்க இன்னொரு தோள்
பகிர்ந்து கொள்ள நல்ல தோழி
ஆலோசனைக்கு அரிய மந்திரி
ஆள வந்த அடுத்த சின்ன ராணி
நடைமுறைக்ள் பழகும் மாணவி
அகமகிழ்வாள் இல்லத்துக் கிழவி
இளந்தலைவியை செதுக்கும் சிற்பி

Monday, March 4, 2013

அறிவோமா

IndiBlogger - The Indian Blogger Community அரவணைப்போம் உலகமயமாக்கலை
பழகுவோம் கன்னாபின்னா கலைகளை
விதைத்திடுவோம்  மலட்டு விதைகளை
அடைப்போம் உள்நாட்டு சிறு வணிக வழிகளை
வேடிக்கைப் பார்ப்போம் பழுக்கும் பிஞ்சுகளை
அறிவோமா அழிக்க வந்த இந்த மாயசுழலை

ஒரு கோடி ஆதங்கம்

IndiBlogger - The Indian Blogger Community பிடிபடவே இல்லை சந்தை நிலவரம்
புரியவே இல்லை திரைகளின் ஆதிக்கம்
தெளிவேயில்லை கலாச்சார குழப்பம்
பொங்கி வடியுது ஒரு கோடி ஆதங்கம்

Saturday, March 2, 2013

ஒப்பனை

IndiBlogger - The Indian Blogger Community ரசிக்கணும் என்றுதானே ஒப்பனை
அலங்கார சாதனங்களின் விற்பனை
என்னைப் பார் என் அழகைப் பார் என்று
மூடியும் மூடாமலும் தெரியும் அங்கங்கள்
கண்ணைக் கவரும் கவர்ச்சி விளம்பரங்கள்
கருத்தை மயக்கும் மாய வலைகள்
விரிப்பவவை வர்த்தக நிறுவனங்கள்
மழுங்குதுதே மெல்லிய உணர்வுகள்

மழையின் சத்தம்

IndiBlogger - The Indian Blogger Community மழையின் சத்தம்
மனதிற்கு இதம்
தாலாட்டும் கீதம்
கிடைக்குமா நிதம்

நிழலாய்

IndiBlogger - The Indian Blogger Community நிழலாய் 
தொடர்வது
வினை
விதி
பாவம்
புண்ணியம்
சாவு
கிரகம்
நட்பு
மனசாட்சி

Friday, March 1, 2013

அருமையாய்

IndiBlogger - The Indian Blogger Community அருமையாய் போற்றி 
வளர்த்தார் அப்பா
அதை இவரிடம் நான்
எதிர்பார்த்தால் தப்பா
அவர் மகளை பொத்தி
வளர்க்கிறார் அருமையாய்
அவள் அதையே நினைப்பாள் 
பின்னாளில் ஒரு தாரமாய்
என் தாய் இன்றும் ஓயாமல்
போற்றுகிறார் தந்தையை
பேத்தியும் செய்வாள் இதை
என்னென்பது இவ்விந்தையை
IndiBlogger - The Indian Blogger Community