Sunday, October 31, 2010

இரையாகும்

IndiBlogger - The Indian Blogger Community
இரையாகும் துளி சத்தமும் துண்டு காட்சியும்
ஐம்புலன் வழி செல்லும் அத்தனையும் மேலும்
கூரான இளம் மூளைத்திறனும் கற்பனாசக்தியும்
விழுங்கும் நம் சிறு மழலை செல்வங்களுக்கே

முதுமரங்கள்

IndiBlogger - The Indian Blogger Community
தள்ளிவைப்பர் தள்ளாத வயதை
தவிர்க்க முடிந்த தயங்கங்களை
தொடர்ந்து இளமை காக்குமிவர்கள்
துளிர்களுடனிசையும் முதுமரங்கள்

Saturday, October 30, 2010

கனி

IndiBlogger - The Indian Blogger Community
பெறுவாய் பேறுகளென்று
பிறக்கும் போது சொன்னது
பொன்னான தேவதை ஒன்று
பின்னால் தொடரும் நிழலாய்
பொறுமையாய் அதை கவனி
பெருமையே பறிக்கும் கனி

Friday, October 29, 2010

நாளைக்கு

IndiBlogger - The Indian Blogger Community
மனது குதிக்கிறது குரங்காய்
குதூகலிக்கிறது குழந்தையாய்
குழந்தைகளுடன் கும்மாளந்தான்
காவேரிக்கரையில் இயற்கை மடியில்
களிக்கும் திட்டமிருக்கு நாளைக்கு

மாயமிது

IndiBlogger - The Indian Blogger Community
குடுக்கணும் வாங்கிய கடனை வட்டியோடு
வானம் நினைத்தது மிக்க கரிசனத்தோடு
நீண்டன நீர்க்கோடுகள் வெள்ளிச் சரம் சரமாய்
நெளியாத நேர்கோடுகள் அத்தனையும் அம்பாய்
நளினமான வயலின் இசையாய் வருட சாரலாய்
நந்தியின் கை மத்தளமாய் சண்டமாருதமாய்
மண்ணும் குளிருது மனமும் சிலிர்க்குது
மறுபடியும் மறுபடியும் நிகழும் மாயமிது

Thursday, October 28, 2010

வளர்ப்போம்

IndiBlogger - The Indian Blogger Community
பண்புகளாம் நறுமணங்களாம்
பரிமாணங்களாம் வண்ணங்களாம்
பூவனங்களாம் உள்ளங்களாம்
பார்த்து பார்த்து வளர்ப்போம்

பாசாங்கு

IndiBlogger - The Indian Blogger Community
பசித்திருக்கிறான் கனவுகளுடன்
ரசித்திருக்கிறான் கண்களிரண்டால்
காத்திருக்கிறான் கனி பழுப்பதற்கு
பாத்திருக்கிறான் பொல்லாத பாசாங்கு

Tuesday, October 26, 2010

இணைய தளம்

IndiBlogger - The Indian Blogger Community
நானே இதை நம்பவில்லை
நினைத்தே பார்த்ததில்லை
நிகரில்லா இணைய தளம்
நித்தம் எனை ஈர்க்குமென்று
நீண்டு விரிந்ததிந்த வலை
நீர் நிலம் தாண்டிய நட்பலை
நன்மை தீமையின் கலவை
நல்லதை அறிவது கலை

Monday, October 25, 2010

கருத்தே

IndiBlogger - The Indian Blogger Community
கருத்தே ஏன் மறைந்தாய்
கண்ணாமூச்சி ஆடுகிறாய்
கவிதையை மறந்தாய்
கதையை துறந்தாய்
காட்டுக்குள் போனாயோ
கருமேகம் புகுந்தாயோ
கருவாய் வளர்வாயே
காத்திருப்பேன் நான்

அந்தாதி

IndiBlogger - The Indian Blogger Community
அந்தாதி பாடிக் களிப்பது
அந்தி மாலை பொழுதுக்கு
அத்தனை உவப்பானது
அவ்வப்போது நாங்கள் கூடி
அற்புதமான பாட்டுக்களை
அள்ளி விடுவது குதூகலம்
அங்கே வயது வரம்பின்றி
அழகிய நிலவொளி நிரம்ப
அரங்கேறும் கொண்டாட்டம்
அன்பான குடியிருப்பிலுண்டு

Thursday, October 14, 2010

சந்தேகம்

IndiBlogger - The Indian Blogger Community
சிதறாட்டம் பெண்ணின் சிந்தனையில்
சிரித்தால் ஏன் சிரித்தாய் என்கிறாள்
சினந்தால் முகம் கருத்து வாடுகிறாள்
சந்தேகம் பேயாய் அவளை ஆட்டிட
மனக்குரங்கு கிளைக்குக் கிளை தாவ
மணவாளன் பாடுதான் திண்டாட்டம்

Tuesday, October 12, 2010

பச்சை முகங்களிலே

IndiBlogger - The Indian Blogger Community
வாழ்கிறாயா நலமாய்
தண்ணீர் போதுமா
வெளிச்சமும் நிழலும்
சரியாய் கிடைக்கிறதா
காலையில் விழித்ததும்
பாசமாய் கேட்கிறேன்
வாசலில் வளர்க்கும்
அத்தனை செடியிடமும்
பச்சை முகங்களிலே
எத்தனை பரவசம்

Saturday, October 9, 2010

அபூர்வம்

IndiBlogger - The Indian Blogger Community
நல்லோரால் நாடும் வீடும் சிறக்கும்
எல்லா கிழமையும் பண்டிகை ஆகும்
அவரோ மிக அரிதாகவே அவதரிப்பர்
அதிசய நிகழ்வாக அவர் தோன்றுவர்
நாள் மாதம் வருடம் மூன்று எண்ணும்
பத்தென அழகாய் அரிதாய் நாட்காட்டியில்
நாளை நாம் காணும் அபூர்வம் போலவே

Wednesday, October 6, 2010

நல்ல இனம்

IndiBlogger - The Indian Blogger Community
நல-விரும்பியோரையே முதலில் பார்க்கலாம்
விபத்து இயற்கை சீற்ற அழிவு கொடிய இழப்பு
ஏற்பட்ட அடுத்த கண்மே சடுதியில் களமிறங்கி
களைப்பின்றி உழைக்கும் அந்த நல்ல இனம் வாழ்க

Monday, October 4, 2010

உண்மையிது

IndiBlogger - The Indian Blogger Community
தகுமோ என்று யோசிக்கவில்லை
தைரியமாய் இரு முதிய தோழிகள்
அங்காடித் தெருவில் அலைந்து
அதையும் இதையும் வாங்கி
மனம் போல் உல்லாசமாகவே
பொழுதையும் காசையும் கரைத்து
பை நிறைய பொருள் சுமந்து
வீடு திரும்புகையில் களைப்பில்லை
ஆண்களோடு செல்வது தொல்லை
அனுபவம் இனிதாய் இருப்பதில்லை
புரியாத உண்மையிது அனைத்து
பெண்களும் ஒருமனதாய் சொல்வது

Sunday, October 3, 2010

செல்லங்கள்

IndiBlogger - The Indian Blogger Community
இன்பமே என் வீட்டில்
காதல்பறவைகள் காட்சி
வித வித வண்ணங்கள்
சளசள பேச்சுக்கள்
துருதுரு பார்வைகள்
அழகான கொஞ்சல்கள்
ஊஞ்சல் ஆட்டங்கள்
பல வித சப்தங்கள்
சின்னஞ்சிறு கிளிகள்
கூண்டுச் செல்லங்கள்

Saturday, October 2, 2010

உவமை மயக்கம்

IndiBlogger - The Indian Blogger Community
நட்சத்திரம் என்றால் வைரம்
குழந்தை பாடும் பாட்டிலே
பாரதிக்கோ வெறும் வைரமல்ல
கருநீலப் பட்டுப் புடவையில்
பதித்த நல் வைரமாம் அது
கண்ணம்மாவின் கரிய விழி
அதன் சுடர்தான் சூரியசந்திரர்
என்னே மயக்கமது மயக்குது
கவியின் உவமை மயக்கம்
தருதே தனிக் கிறக்கம்

வியப்பின் விளிம்பில்

IndiBlogger - The Indian Blogger Community
ஏது பண்டிகை என்று
என்னுள்ளே குழப்பம்
வழியெங்கும் வாழைமரம்
வீதியெல்லாம் குதூகலம்
அதற்குள் சித்திரையா
திருவிழா வந்துவிட்டதா
மெல்ல உறைத்தது அது
எந்திரன் வெளியிட்ட நாள்
ரசிகர்கள் கொண்டாட்டம்
வியப்பின் விளிம்பில் நான்

வரமா

IndiBlogger - The Indian Blogger Community
சாபமோ வரமோ
நீண்டுவிட்ட ஆயுள்
நரைத்த முடியும்
உதிர்ந்த பல்லும்
உளறும் சொல்லும்
சுருங்கிய தோலும்
வற்றிய முகமும்
அழகின் அழிவே
அதைவிட பெரிதே
நோயும் வலியும்
தேய்ந்த எலும்பில்
குறுகிவிட்ட குடலில்
மங்கிய பார்வையில்
மந்தமான செவியில்
முடங்கிய நிலையில்
வெறித்த அமைதியில்
ஒருவித வெறுமையில்
உள்மன தனிமையில்
வைத்திய செலவில்
வேற்றிட நிழலில்
விளங்காத கலக்கத்தில்
வரமா ஆயுள் நீழ்வது

Friday, October 1, 2010

அன்பு

IndiBlogger - The Indian Blogger Community
அன்பு என்ன மனதில் ஊற்றோ
இறைக்க இறைக்க ஊறுமோ
குறையாது தினம் வளருமோ
வருந்தாது பாரம் தாங்குமோ
உறங்காது இமைக்குள் காக்குமோ
தேடாது தானாய் வந்த வரமோ
IndiBlogger - The Indian Blogger Community