Saturday, August 28, 2010

பொய்யுலகின் பொழுதுபோக்குகள்

IndiBlogger - The Indian Blogger Community
ஏழ்மையறியா இந்திரலோகம் படைத்தேன்
தங்கக்காசு அங்கே கொட்டுது மழையாய்
மாடி வீடுகள் கேளிக்கைகள் பூங்காக்கள்
காய்த்துத் தொங்கும் கனிமரங்கள் காணீர்
எத்தனை பூக்கள் தாவரங்கள் குளிர்ச்சியாய்
வழுக்கும் தார் சாலைகள் மாநகரந்தன்னிலே
எந்நேரமும் மக்கள் கூட்டமாய் நடமாட
அவர்களையெல்லாம் அன்பாய் நான் வரவேற்க
உற்சாகம் பெருக மேலும் மேலும் வளர்கிறது
கற்பனை கலந்து உருவாகும் அழகோவியமாய்
காலம் போவது தெரியாமல் மூழ்கினேன்
பொய்யுலகின் பொழுதுபோக்குகள் அற்புதம்
இணையத்தில் விளையாடும் சிறுமியானேன்

சொர்க்கம்

IndiBlogger - The Indian Blogger Community
சுகமே தனிமை
கையில் புதினம்
கொறிக்க பக்கோடா
குடிக்கத் தேனீர்
பின்னணியில் இசை
பதமான வானிலை
பதறாத சூழ்நிலை
ஓய்வும் சொர்க்கம்

Friday, August 27, 2010

மீண்டுமொரு வசந்தம்

IndiBlogger - The Indian Blogger Community
முன்னம் பார்த்த முகங்களா இவை
முதிர்ச்சியின் அடையாளம் எத்தனை
மூப்பின் தப்பாத பல அறிகுறிகள்
மூக்குக்கண்ணாடி நரைத்த தலை
மறைந்துவிட்டனவே கொடியிடைகள்
மறக்கவில்லை நளின நடை உடை
மனம் திறந்த கள்ளமில்லா கதைகள்
மடைதிறந்த வெள்ளமாய் வார்த்தைகள்
மலரும் நினைவுகளில் அருவிக்குளியல்
மாதங்கள் போலாயின வருடங்கள்
மாயையாய் திரும்பிய பள்ளிநாட்கள்
மணந்தது நாற்பத்தியெட்டாண்டாகியும்
மறுபடியும் தோழியர் சந்தித்தபோது
மீண்டுமொரு வசந்தம் அன்று பூத்தது

Thursday, August 26, 2010

தாயே

IndiBlogger - The Indian Blogger Community
தாயே உன் தலையில் அணிய தொப்பிகள் எத்தனை
தாரமானாய் கணவனானான் உன் முதல் குழந்தை
பதவி உயர்வுகள் பல பெற்றபின்னும் வளர்கிறாய்
தோழியாய் தாதியாய் ஆசானாய் ஆலோசகனாய்
ஆலமரமாய் நீ குடை விரிக்கிறாய் அந்நிழலிலே
சுற்றம் மொத்தமும் அங்கே சுகமாய் சுவாசிக்குதே

காகிதக்குப்பைகள்

IndiBlogger - The Indian Blogger Community
கருத்தே இல்லாத கதைகள்
கற்பனை வற்றிய புனைவுகள்
குணம்கெட்ட பல போக்குகள்
காண்பீர் காகிதக்குப்பைகள்

நல்ல கருவி

IndiBlogger - The Indian Blogger Community
கோலே ஆட்டுவிக்குது குரங்கை
வீட்டுப்பாடம் எழுதும் குழந்தையை
இசைக்கின்ற ஒரு வாத்திய குழுவை
இடையர் மேய்க்கும் கால்நடையை
காவலரிடம் மாட்டிய கயவாளியை
கோலே வழி நடத்துது குருடரை
கூடிப் பாடி மகிழும் குமரியரை
உண்டோ அது போல் நல்ல கருவி

Tuesday, August 24, 2010

நெறி

IndiBlogger - The Indian Blogger Community
நெறியுமே நேரான கோலோ
முறியுமோ ராமன் வில்லாய்
நடத்துமோ நல்வழியினில்
மதித்து நடந்த மக்களை

Monday, August 23, 2010

வரைமுறை

IndiBlogger - The Indian Blogger Community
நிறைவேறுமா பொல்லாத ஆசைகள்
நிறமில்லாத சாரமில்லாத கனவுகள்
சூரியன் மேற்கே உதிக்காது
கடல்நீர் கரிக்க மறக்காது
கோழி கூவிட முடியாது
கருவை ஆணும் சுமப்பானா
வரம்பில்லா ஆசைகள் தீது
வரைமுறையோடு விளையாடு

காதல் வயப்பட்டபோது

IndiBlogger - The Indian Blogger Community
காவியமே பிறக்கும்
கற்பனையும் கவிநயமும்
சொல்வளமும் அணியழகும்
அருவியாய் கொட்டும்
உருப்படியாய் படியாத
எழுத்தாற்றல் இல்லாத
இளவயது மாந்தர்தாம்
காதல் வயப்பட்டபோது

ஊடல்

IndiBlogger - The Indian Blogger Community
பாழ் ஆனது பொன் மாலைப் பொழுது
பகல் போல் காய்ந்த முழு நிலவு
பஞ்சணையும் மல்லிகை பூமணமும்
பனிப்போராய் ஊடல் உலவியதால்

வாரிசு

IndiBlogger - The Indian Blogger Community
காவியமே கவிநயமே
கனிரசமே கன்னல்சாறே
சித்திரமே சிங்காரமே
செதுக்காத சிற்பமே
தவமென்ன செய்தேன்
தேனான வாரிசுக்கு

Tuesday, August 17, 2010

எழுத்தில்லா காவியம்

IndiBlogger - The Indian Blogger Community

விளக்கம் தேட அகராதி வேண்டுமோ
வார்த்தை எதுவும் உதிராமல் புரியும்
விழியின் விரிப்பும் சிகப்பும் சிரிப்பும்
வாயின் குவிப்பும் சுழிப்பும் பழிப்பும்
வெட்டும் கழுத்தின் சாடையும் அழைப்பும்
விரல்கள் பத்தின் சேட்டையும் சைகையும்
வளைந்த இடையும் புருவமும் பாதமும்
வளையாத வகிடும் நாசியும் நடையும்
வண்ண மயிலவள் ஒவ்வொரு அசைவும்
வடிப்பதெல்லாம் எழுத்தில்லா காவியம்

இல்லை

IndiBlogger - The Indian Blogger Community

இல்லை என்றும் இல்லை
நிறைந்த உள்ளத்தில்
இல்லை ஒரு தொல்லை
பற்றை ஒழித்துவிட்டால்
இல்லை இனி கவலை
இரண்டாம் பாலபருவத்தில்
இல்லை ஒரு இடர்
துணிவுள்ள நெஞ்சில்
இல்லை ஒரு இருள்
தெளிவே வாழ்வின் ஒளி

எந்திரனின் வசமானது

IndiBlogger - The Indian Blogger Community

காதலுமே எந்திரனின் வசமானது
கற்பனையின் எல்லையில்லா வளமோ
கலிகாலத்தின் இன்னொரு கோலமோ
காணத்தான் கண்ணிரண்டு போதுமோ

சொத்து

IndiBlogger - The Indian Blogger Community

இழப்பு என்று எதை எண்ண
இரு கையில் கொண்டு வந்தோமா
இறுதியிலே கொண்டு செல்ல
இருக்கும் கணமெல்லாம் சொத்து

கடைசி

IndiBlogger - The Indian Blogger Community

தின்றபோது தெரியாது
அது கடைசி முறையென்று
கண் மூடி தூங்கியபின்
கணப்பொழுதில் விடுதலை
கோர ரயில் விபத்தென
கூறும் தலைப்புச் செய்தி
IndiBlogger - The Indian Blogger Community