Sunday, March 7, 2010

ஒரு நாள்

அற்புதமான ஒரு அதிகாலை வேளையில் அதிசயமான தேவதை ஒன்று என் கண் முன்னே தோன்றி என் காதில் கிசுகிசுத்தது “பெண்ணே! ச்சர்யமான வரம் ஒன்றை உனக்கு வழங்குகிறேன். இன்றொரு நாள் நீ உன் கணவராகவும் அவர் நீயாகவும் இருக்கப் போகிறீர்கள்.”
மின்னலடித்து மறைந்த பிரமை நீங்க ஒரு முழு நிமிடம் னது. மெல்ல விஷயம் மூளையில் பதிந்தது. அதாவது அடுத்த சில நொடிகளில் அலரப்போகும் அலாரத்தை அமுக்கி விட்டு கலைந்த முடியையும், கலையாத தூக்கத்தையும் ஒதுக்கிவிட்டு எழுந்து பல் தேய்த்து, பாலைக் காய்ச்சி, காப்பி கலந்துவிட்டு பரபரப்பாக இரண்டு அடுப்பை எரிய விட்டு, மிக்ஸியை ஓட்டி, வாசலுக்கும், அடுக்களைக்கும் நூறு தரம் ஓடி, குடும்பத்தினர் ஒவ்வொருவரும் கூப்பிடும் குரலுக்கு பதில் சொல்லி, அனைவரையும் சாப்பிட வைத்து, சாப்பாடு கட்டிக்கொடுத்து அனுப்பிவிட்டு “அப்பாடா!” என்று அயர்ச்சியுடன் உட்காரும் சராசரி நாள் அல்ல இது.
அப்படியில்லாத வேறு மாதிரியான ஒரு பொழுதை யோசித்துப் பார்க்கவே கூட சிரமாக அல்லவா இருக்கிறது! அப்படியானால் இன்று நான் ற அமர காப்பி குடித்து விட்டு, ருசியான காப்பிக்கு நன்றியாக அடுக்களைக்குள் டம்ளரை வைக்கச் செல்லும் சாக்கில் மனைவியின் இடுப்பில் ரகசியமாக, செல்லமாக கிள்ளி உற்சாக டானிக் கொடுத்து விட்டு தினசரியின் விளையாட்டு விமரிசன பக்கத்தில் அமிழ்ந்து போய் சுற்றி நடக்கும் காலை நேரத்து பரபரப்பை சுகமாக மறந்து கிடந்து விட்டு டாணென்று சரியான நேரத்திற்கு ஷ¤வை மாட்டிக் கொண்டு பைக்கை உதைத்து கிளாம்பி பீஸ் செல்லலாம்.
அங்கே இளமை பொங்கும், இனிக்கப் பேசும், எடுத்ததெற்கெல்லாம் சிரிக்கும் இளஞ்சிட்டுக்களை -இவரது வெகுளியான வர்ணனையால் நெஞ்சம் படபடக்க வைப்பவர்களை-நேரில் பார்த்து கணித்து, இல்லையில்லை, கடலை போடும் சுகம் என்னவென்று கொஞ்சமாய் ருசித்துவிட்டு, மேலதிகாரியின் கடியையும், காலை வாரும் சக ஊழியர்களின் மெத்தனத்தால் வரும் வேலை பளுவையும் நேரடியாய் உணருவேன்.
றியிருந்தாலும் அருமையாய் சமைத்த உணவை டிபன் பாக்ஸிலிருந்து றுதலுடன் உண்டு நன்றியுடன் வீட்டுக்கு போன் பண்ணி “மஷ்ரூம் டிஷ் சூப்பர்!” என்று கூறி மறுமுனை காதுகளையும், மனதையும் ஒருசேர குளிர வைப்பேன். கடிகாரத்தை பார்த்துப் பார்த்து மணித்துளிகளை உருட்டி விட்டு வீட்டுக்கு கிளம்பி விடுவேன்.
வழியில் மறக்காத பழக்கமாய், மங்காத மயக்கமாய் மனைவிக்கு மல்லிகை வாங்கிக் கொள்வேன்.
வீட்டுக்கு வந்ததும் பள்ளிக்கூட பாட சந்தேகங்களை கேட்க வரும் குழந்தைகளை “அம்மாவுக்குத்தான் இதெல்லாம் ஈஸியா விளக்கிச் சொல்லத் தெரியும்” என்று ஐஸாக பேசி நைஸாக தப்பித்து டிவி பார்க்கத் துவங்குவேன். அடுத்து சுவாரஸ்யமாக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து முழு கவனத்தையும் அதில் செலுத்தும் போது வேலைகளை முடித்து விட்டு சுவாசமாய் அருகில் வந்து மனைவி அமரும் போது “அய்யய்யோ! அறுக்கப் போகிறாளே!” என்று மனசுக்குள் அடிக்கும் அலாரமணியை கமுக்கமாய் அமுக்கி விட்டு அவள் கூறும் அசுவாரஸ்யமான தகவல்களை, பிறந்த வீட்டு பீற்றல்களை, அக்கம்பக்கத்து புரணிகளை, அன்றைய பகலின் அர்த்தமில்லாத சங்கதிகளை, அலுப்புத்தட்டும் அக்கப்போர்களை கவனமாக கேட்பது போல் பாவனை பண்ணி, அதை நிலை நிறுத்த அவ்வப்போது பொருத்தமான “அப்படியா”, “அடடா”, “அப்புறம்” போன்ற இடைச்செருகல்களை உபயோகித்து நல்ல சிநேகிதனாய் செவி கொடுத்து-நிச்சயமாய் கவனம் முழுவதையும் அற்புத கணிணி அபகரித்துக்கொண்டிருக்கும்- இனிய இரவிற்கு இதமாக வழி வகுப்பேன்.
இக்கரைக்கு அக்கரை பச்சை என்று கிடைத்த ஞானத்தில் நான் நானாக எழப்போகும் இனிய எதிர்பார்ப்புடன் அலாரத்தை அருகில் எடுத்து வைத்துக் கொண்டு இமைகளை மூடி இதமான உறக்கத்தில் எனை இழப்பேன்.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community