Saturday, March 20, 2010

சதியும் பதியும்

கடைந்திட கிளம்பினர் பாற்கடலை
அமரராகும் ஆசையில் அமிர்தம் தேடி
தேவர்களும் அசுரர்களும் இரு அணியாய்
வடவரை மலை தோதான மத்தானது
வாசுகி பாம்பே கயிறாய் இழுபட்டது
வாதனை தாங்காத வாசுகியும் தான்
காக்கிவிட்டாள் கொடும் விடத்தை
பாற்கடல் பாழாய் போய்விடலாகாதே
பரமசிவன் பாய்ந்து நஞ்சை அள்ளி
வாயில் போட்டு விழுங்கினனே
பதறிய பத்தினி பார்வதி பற்றினாள்
பதியின் குரல்வளையை இருக்கமாய்
ஆலகால விடமது அங்கேயே தங்க
நீலகண்டனானவன் நன்றியாகவே
இடம் கொடுத்தான் தன் உடலில்
இடது பாகத்தை இல்லாளுக்கு
சதியும் பதியும் பாதி பாதி
சம்சாரத்தின் நல்ல நீதி
தீமை தடுப்பவள் தர்மபத்தினி
உரிமை தருபவன் உடையவன்

4 comments:

IndiBlogger - The Indian Blogger Community