Sunday, March 7, 2010

'உம்'

'உம்' என்றாள் மெதுவாக
திரும்பிப் பார்த்தான்
'உம்' என்றாள் சப்தமாக
எழுந்து வந்தான்
'உம்' என்றாள் வினாவாக
விளக்கம் சொன்னான்
'உம்' என்றாள் உறுமலாக
உண்மையை சொன்னான்
'உம்' என்றாள் சிணுங்கலாக
நெருங்கி வந்தான்
"உம்" கள் தொடர்ந்தன
வார்த்தைகள் வீணே
சதிகார "உம்' ஒன்றே
சதியின் அகராதியே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community