Sunday, March 14, 2010

ஆண்மகனே!

கடல் ஆழந்தான்
மீனுக்கல்ல
பெண்ணும் கடலே
மீனாய் மாறு

வானம் உயரந்தான்
பறவைக்கல்ல
விரிந்தவள் அவளே
சிறகை விரித்திடு

கல் கடினந்தான்
உளிக்கல்ல
சிலையாய் அவளை
மெல்லச் செதுக்கு

மரம் உறுதிதான்
அரத்திற்கல்ல
மறித்து நிற்பாள்
மெல்லிய கத்தியாகு

பாதை நீளந்தான்
பாதத்திற்கல்ல
நெடுங்கதை அவளை
நிதானமாய் வாசி

பூட்டுக்கு சாவி
புதிருக்கு விடை
பெண்ணுக்கு ஆண்
அறியாயோ நீ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community