Saturday, March 20, 2010

நான்

அல்ல அல்ல நானல்ல
தோற்பது என்றும் நானல்ல
சிறுமை என்பது எனக்கல்ல
சிறுமதி படைத்தவனே
சின்னவளை சீண்டுபவனே
நான் என்பது உடல் உனக்கு
நான் என்பது உயிர் எனக்கு
என் உயிரை தொட ஏலாதடா
உன் எல்லை சிறியதடா
புழுவல்ல நான் துடிப்பதற்கு
புல்லல்ல நான் நசுங்கிட
புழுதியாய் என்னை மிதிக்கும்
அற்பமாய் என்னை மதிக்கும்
ஆணவ ஆண் மிருகமே
ஒட்டாத உயிரை அறியாது
உரிமை கொண்டாடுகிறாய்
எக்காளமிடுகிறாய் பதரே
தள்ளி நிற்கும் தண்டவாளமடா
தாமரை இலை தண்ணீரடா
தாலிக்காக பொறுத்தேனா
வேலிக்காக இருப்பேனா
பெண் கர்வம் காத்தேனா
சோதிக்காதே தாங்கமாட்டாய்
விஸ்வரூபம் நான் எடுத்தால்

2 comments:

IndiBlogger - The Indian Blogger Community