Saturday, March 13, 2010

மொழிகள்

மொழிகள் எடுக்கும் பல அவதாரம்
அவை அர்த்தமுள்ள மெளனங்கள்
இதமாய் வருடும் மயிலிறகுகள்
நெருப்பாய் சுட்டிடும் சவுக்குகள்
கூட்டத்தை உசுப்பும் உத்திகள்
சம்மதமான எதிர்மறைகள்
சம்மதமில்லாத ஒப்புதல்கள்
வாழ்க்கை வண்டியின் அச்சுகள்
வாய் உதிர்க்காத வார்த்தைகள்
வெளி வர பல வழிகள்
பேசும் விழிகள் இமைகள்
முகத்தில் மாறும் பாவங்கள்
அவயவங்களின் அசைவுகள்
அனைத்தும் காவியங்கள்
அர்த்தங்களும் அனர்த்தங்கள்
வேண்டும் சரியான புரிதல்கள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community