Sunday, March 7, 2010

வால்

நாயே நிமிர்த்த முடியா உன் வாலோ
நன்றியைத்தான் நன்றாய் காட்டுமே
ஆடே உன் வாலோ அளவானதே
புலியே உன் வாலை சீண்டலாகாதே
குதிரையே உன் வாலில் காசு ஓடுமே
வாலறுந்த நரியே தந்திரம் செய்தாயே
விலாங்கின் தந்திரம் பாம்புக்கு மீனுக்கு
வாலை தலை தனியே காட்டுவதே
அறுந்த பல்லியின் வால் துடிக்குமே
மீண்டும் புதுசாய் வால் வளர்ந்திடுமே
தன் வாலைத் துரத்தி ஓய்ந்த பின்னே
பூனையும் கற்றது பாடம் ஒன்றே
ஒய்யார ஆசனமானது அனுமன் வாலே
தலை இருக்க வால் ஆடலாகாதே
வால் பிடித்து பிழைக்க வேண்டாமே
வாலை விட்டு தும்பை பிடிக்காதே
வம்பர் வாலை நறுக்க அஞ்சாதே
வளமும் நலமும் வாலாய் வளரட்டுமே

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community