Monday, March 15, 2010

இவனைப் போலவே

பிழைப்போமாக நாமும் மதியூகத்துடன்
மனதில் ஈரத்துடன் இவனைப்போலவே:

தராசு போல் இரு தோளிலே
பானை இரண்டை கட்டி
கேணி நீர் கொண்டு வர
நடையாய் நடப்பானவன்
பானை ஒன்றில் சிறு கீறல்
பாதி நீர் வழியில் ஒழுகிட
ஒவ்வொரு நடைக்கும்
ஒன்றரை பானை நீர்தான்
வீட்டிற்கு கிடைத்ததாம்
கீறல் பானை இதனால்
மனம் நொந்ததுவாம்
குறையற்ற பானையோ
கர்வமாய் சிரிக்குமாம்
நெடுநாளாய் இது நடக்க
ஒரு நாள் பொறுக்காது
கூசிப்போன கீறல் பானை
அவமானத்தோடு அவனிடம்
வருத்தத்தை கூறியதாம்
இனிய மொழியுரைத்தான்
அவனும் இங்ஙனமே
என் பாதையதனிலே
உன் பக்கம் மட்டிலும்
தூவினேன் பூவிதைகளை
வீடு வரை வழியெங்கும்
நீ சிந்திய நீரினாலே
வளர்ந்து செழித்து
சிரிக்குது பூக்களே
உன் பக்கம் மட்டுமே
நிறையும் குறையும் இயல்பு
குறையை நிறையாய் மாற்று
குறையை குற்றமாய் நோக்காது
குணமாய் அதையும் போற்று
மாசில்லா மனிதரிங்குண்டோ
மாண்பற்றவர் ஆவாரோ அவர்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community