Monday, March 15, 2010

மடமை

நகையாடல் செய்தேன் என்னை நானே
நரை வந்தும் தெரியாத சங்கதி நிறைய
பூரி சப்பாத்திக்கு தோதானது சன்னா
தேங்காய் சட்னிக்கு பொட்டுக்கடலை
பால் தயிர் பழைய சாதமுடன் பக்கோடா
மூலப்பொருள் கொண்டைக்கடலையே
முளைக்கும் விதம் மூளை நினைக்கலையே
பட்டாணி மொச்சை போலொரு காயாய்
கருதிய மடமை புரிந்து போனது நேற்று
பட்டுப்பூச்சி கூடு போல் காய்களுடன்
கட்டு கட்டாய் குட்டைச் செடிகள்
சந்தையிலே விற்றிருக்க விநோதமான
தாவர மர்மம் அறியப்புகுந்த போது
அடடா ஒய்யாரமாய் உள்ளமர்ந்து
ஒத்தை கொண்டைகடலை தானே
பச்சையாய் சிரித்தது எனைப் பார்த்து
ஆச்சரியங்களுக்கிங்கு முடிவுண்டோ
உறங்கும் உண்மைகள் எத்தனையோ

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community