Saturday, March 13, 2010

சுனாமி

அங்கிங்கெனாத புது விதத்திலே
எங்கெங்கு காணினும் சக்தியடா
திறந்த மேனியாய் நிற்கிறாள்
கவர்ச்சியாய் அவளிருக்கிறாள்
கண்ணை சுண்டியிழுக்கிறாள்
கருத்தைத் தொலையச் செய்கிறாள்

வண்ண வண்ண விளம்பரங்கள்
எண்ணற்ற பொது இடங்கள்
சாலைகள் விற்பனை கூடங்கள்
சஞ்சிகைகள் பலதர நாளிதழ்கள்
சின்ன பெரிய வெள்ளித் திரைகள்
சிறுத்த உலகின் மூலை முடுக்குகள்

கண் கூசும் விரச காட்சிகள்
காது கூசும் ஆபாச வரிகள்
அவளை சுற்றி அடிக்கும் கும்மிகள்
வர்த்தகர் குறி பொற்காசுகள்
ஊடகத்தின் சத்தமான ஓசைகள்
காமத்தின் கட்டவிழ்த்த ஆசைகள்

ஒழுக்கம் தொலைத்த தேவைகள்
ஒத்துழைக்கும் ஒப்பனை பாவைகள்
அவர்களுக்கில்லை ஏதும் வருத்தங்கள்
மரத்துப்போனதவர்கள் உணர்வுகள்
மானத்தை உதிர்த்த கவரிமான்கள்
வலையை அறியாத செம்மீன்கள்

பாதிக்கப்படுவதோ பேதைகள்
பாதுகாப்பில்லாத குமரிகள்
அப்பாவி பிஞ்சு சிறுமிகள்
வெறிநாய்களின் சுலப இரைகள்
வாழ்வை தொலைக்கும் அபலைகள்
வடுவை சுமக்கும் அவலங்கள்

எதிர்பாராத பேராபத்துக்கள்
எழுதவொண்ணா பரிதாபங்கள்
யாரோ செய்யும் பாவங்கள்
எவரோ அடையும் லாபங்கள்
எங்கோ கடலடியில் பூகம்பங்கள்
கரையோரம் நடக்கும் பேரழிவுகள்

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community