Monday, March 15, 2010

வாழ்விலக்கணம்

கட்டங்களை வட்டங்களைத் தாண்டி யோசி
மனித அடையாளம்தனைத் தாண்டாமல் யோசி

ருசிக்கும் பசிக்கும் நிறைவாகப் புசி
நோயும் நோவும் நிறையாமல் புசி

ரசித்தும் பகுத்தும் தேடி வாசி
கணநேர திருப்தி தேடாமல் வாசி

உண்மையை உள்ளுணர்வை ஒளிக்காமல் எழுது
கண்டனத்தைக் கண்ணியத்தில் ஒளித்து எழுது

ஆக்கத்தை ஊக்கத்தை எங்கெங்கும் தேடிடு
அறிவை அமைதியை உன்னுள்ளே தேடிடு

ஐயமும் அறிவீனமும் தொலைந்திட வாதிடு
நயமும் நியாயமும் தொலையாமல் வாதிடு

நல்லதும் நட்பும் வளர்த்திட கூடிடு
வம்பும் வழக்கும் வளர்க்காமல் கூடிடு

நட்சத்திர மண்டலத்தில் சறுக்கி விளையாடு
நிதானமும் கவனமும் சறுக்காமல் விளையாடு

சிறுமையும் சகிப்பின்மையும் தவிர்த்து வினையாற்று
பெருமையும் பண்பாடும் தவிர்த்திடாது வினையாற்று

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community