Sunday, March 14, 2010

நேரமேயில்லை

நாளை எண்ணுவாள் தேர்வு முடிய
நாளை எண்ணுவாள் விடுமுறை முடிய
நிச்சயம் முடிந்ததும் மணநாளுக்கு
மசக்கை வந்ததும் பிள்ளை பிறப்பதற்கு
பின்னே நடப்பதற்கு மழலை பேசுவதற்கு
படிப்பதற்கு பட்டம் பெறுவதற்கு
பிழைக்க வழி கிடைப்பதற்கு
பொறுப்பாய் குடும்பம் அமைவதற்கு
பேரப்பிள்ளை பேற்றிற்கு அவர் வளர்வதற்கு
அடுத்த விடுமுறையில் சந்திப்பதற்கு
பெண் போகும் நாளை எண்ணவில்லை
ஏனோ அதற்கு நேரமேயில்லை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community