Thursday, March 11, 2010

விடுதலை

நில்லாமல் சுழலுது பூமி
நிதமும் புலருது காலை
நிழலாய் மாறுது நேற்று
நிலவும் தேய்ந்து வளருது
நித்திரையில்லாதது இயற்கை

நியதிகள் அதன் அச்சு
நிலை மாறும் வேளை
நிகழும் அழிவும் அழுகையும்
நிகழ்வில் உறையும் நீதி
நினைத்தால் மாறும் மானிடம்

நிதியின் பின்னே உலகம்
நிகழ்த்தும் பல பாதகம்
நின்று கொல்லும் தெய்வம்
நிகழ்காலம் தரும் பல வரம்
நிறைகுடமாகுமோ நம் மனம்

நிந்தனை ஏதும் நெருங்காது
நிலத்தில் யார்க்கும் வணங்காது
நிம்மதியின் குளிர் நிழலிலே
நிலைக்கின்ற மோனமொன்றே
நிகரில்லா பேரின்ப நிலை

நிழல்கள் நீளும் வேளை
நினைவுகள் மங்கும் மாலை
நிழலாய் மாறும் கவலை
நிதானம் காணும் வெள்ளம்
நிரம்பி ததும்பும் உள்ளம்

நிற்காத அலைகளின் ஆழம்
நிச்சலனம் உறங்கும் மஞ்சம்
நிசங்கள் உணர்ந்த நெஞ்சில்
நிர்மூலமாகும் பற்றெல்லாம்
நிரந்தரமானதோர் விடுதலை

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community